யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

|

சாதாரணமான ஒரு விஷயத்தை வேறு ஒரு வடிவத்தில் சில புதுமையுடன் புதிதாக வழங்கும் போது, எப்போதுமே அதன் ரேஞ் மாறிவிடுகிறது. இது காலம் காலமாக நடந்து வரும் விஷயம் தான் என்றாலும் கூட, இப்போது நடந்துள்ள ஒரு புதிய விஷயம், ஒட்டுமொத்த இணைய வாசிகளையும் வியப்பில் மிரள வைத்துள்ளது.!

நார்மல் ஐபோனை (iPhone) போல்டபில் ஐபோனாக ஒருவர் தனது சுயமுயற்சியால் மாற்றியுள்ளார்.

எது.! புதிதாக போல்டபில் ஐபோன் வி (Foldable iPhone V) மாடலா?

எது.! புதிதாக போல்டபில் ஐபோன் வி (Foldable iPhone V) மாடலா?

ஒரு சாதாரண ஐபோனை பார்ட் பார்ட்டாக பிரித்து, அதை மோட்டோரோலா ரேசர் பாடியில் வைத்து புதிதாக போல்டபில் ஐபோன் வி (Foldable iPhone V) என்ற மாடலை ஒருவர் உருவாக்கியுள்ளார். இது ஒட்டுமொத்த இணைய வாசிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவனத்திற்கே டஃப் கொடுத்த தனி மனிதன்.!

ஆப்பிள் நிறுவனத்திற்கே டஃப் கொடுத்த தனி மனிதன்.!

என்ன தான் ஆண்டு தோறும் ஆப்பிள் நிறுவனம் புது - புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்தாலும், நிறுவனம் இன்னும் போல்டபில் ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யாமல் இருக்கிறது. மறுபுறம், சாம்சங் (Samsung) நிறுவனம் தொடர்ந்து பல போல்டபில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

தீவிரமான ஆப்பிள் ரசிகர் கடுப்பான முடிவு

தீவிரமான ஆப்பிள் ரசிகர் கடுப்பான முடிவு "இப்படி" தான் இருக்கும் போல.!

ஐபோன் ரசிகர்களுக்கு இன்று வரை கிடைக்காத விஷயமாக போல்டபில் ஸ்மார்ட்போன் கலாச்சாரம் இருக்கிறது. தீவிரமான ஒரு ஆப்பிள் ரசிகர், போல்டபில் ஸ்மார்ட்போன்களை பார்த்துக் கடுப்பானால், என்ன நடக்கும் என்பதற்கான சான்று தான் இந்த புதிய போல்டபில் ஐபோன் வி (Foldable iPhone V). ஆம், இது நிறுவனம் அல்லதாக ஒரு தனிநபர் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் டிவைஸை பிச்சு.. மோட்டோரோலா ரேசர்ல தச்சு.. செய்யப்பட்ட புது ஐபோன்.!

ஐபோன் எக்ஸ் டிவைஸை பிச்சு.. மோட்டோரோலா ரேசர்ல தச்சு.. செய்யப்பட்ட புது ஐபோன்.!

சீனாவை சேர்ந்த டெக்னாலாஜிக்கல் ஏஸ்தெடிக்ஸ் என்ற யூடியூப் கிரியேட்டர் (YouTube Creator) சேனலின் தனி நபரால், இந்த புதிய Foldable iPhone V உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சாதாரண ஐபோன் எக்ஸ் (iPhone X) மாடலை பிரித்து, அதை போல்டபில் போனாக மாற்றுவதற்காக மோட்டோரோலா ரேசர் (Motorola Razr) சேசிஸ் இல் வைத்து புதிய டிவைஸை உருவாக்கியிருக்கிறார்.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

பலமுறை தோல்வி.. பல போன்கள் வீணாகியும் விடாமுயற்சி.!

பலமுறை தோல்வி.. பல போன்கள் வீணாகியும் விடாமுயற்சி.!

இரண்டாக மடக்கக் கூடிய வகையில் மோட்டோரோலா ரேசர் பாடியில் ஐபோன் எக்ஸ் பாகங்களைப் பதித்து, இவர் புதிய டிவைஸை உருவாக்கியுள்ளார். இந்த புதிய Foldable iPhone V சாதனத்தை உருவாக்க இவர் பல டம்மி போன்களை வீணடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை தோல்விக்கு பிறகு, இறுதியில் முழு செயல்பாட்டுடன் இயங்கும் போல்டபில் ஐபோன் மாடலை இவர் உலகிற்குக் காண்பித்துள்ளார்.

போல்டபில் ஐபோன் வி எப்படி உருவானது? இதோ முழு வீடியோ.!

போல்டபில் ஐபோன் வி எப்படி உருவானது? இதோ முழு வீடியோ.!

இவர் எப்படி படிப்படியாக, போல்டப்பில் ஐபோன் வி மாடலை உருவாக்கினார் என்பதை விபரமாக காண்பிக்கும் வீடியோ பதிவை அவருடைய யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ முழுமையாகச் சீன மொழியில் இருந்தாலும் கூட, சப்டைட்டில் உடன் பார்க்கும் பொழுது, இவர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கிறார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!

விசித்திரமான யோசனைக்கு கிடைத்த பலன்.

விசித்திரமான யோசனைக்கு கிடைத்த பலன்.

இவருடைய இந்த விசித்திரமான யோசனை, இவருடைய ஐபோன் எக்ஸ் சாதனம் கீழே விழுந்து டேமேஜ் ஆனா பிறகு தோன்றியது என்பதை அவர் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். டேமேஜ் ஆனா ஐபோன் X மாடலின் பாகங்களை வைத்துத் துவங்கிய இந்த வினோதமான முயற்சியில், பல மேம்படுத்தல்களை சுயமாக மேற்கொண்டு, பல தடைகளைத் தாண்டி புதிய போல்டப்பில் ஐபோன் மாடலை உருவாக்கியுள்ளார்.

Foldable iPhone V எப்படி இருக்கிறது? இந்த முயற்சி வொர்த்-ஆ?

Foldable iPhone V எப்படி இருக்கிறது? இந்த முயற்சி வொர்த்-ஆ?

இவர் உருவாக்கியுள்ள Foldable iPhone V பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சந்தையில் கிடைக்கும் போல்டப்பில் போன்கள் போல காட்சியளித்தாலும், இதன் பினிஷிங் தலைசிறந்த நிறுவனத்துடையது போல இல்லை என்பது மட்டுமே ஒரு சிறிய குறையாக இருக்கிறது. இவர் உருவாக்கியுள்ள Foldable iPhone V மற்ற அணைத்து அம்சங்களையும் சிறப்பாகச் செய்கிறது.

Best Mobiles in India

English summary
YouTube Creator Converted Motorola Razr and iPhone X into New Foldable iPhone V Model

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X