Home
News

ஓ மை காட்.. ஐபோன் பயனர்கள் செய்யவே கூடாத 3 விஷயங்கள்.. இதில் 3வது விஷயம் ஆபத்தானது.. எச்சரிக்கும் Apple..

ஐபோன் (iPhone) தண்ணீரில் விழுந்தாலோ அல்லது ஐபோன் மீது தண்ணீர் விழுந்தாலோ, பயனர்கள் செய்யவே கூடாத 3 விஷயங்கள் பற்றி ஆப்பிள் (Apple) நிறுவனம் தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஐபோன் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

iPhone: பொதுவாக ஐபோன் வாங்கியவுடன் எல்லோரும் போடும் சீன் தான் இது. "ஏய் இது ஐபோன்டா தண்ணி பட்டா கூட எதுவுமே ஆகாது" என்று சீன் போடுவார்கள். என்னதான் அது ஐபோன் ஆக இருந்தாலும், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு எப்போது தண்ணீர் ஒரு எமன் தான். உண்மையை எப்படி மறைத்து கூறினாலும், ஐபோனால் கூட தண்ணீரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என்பதே உண்மையாகும்.

ஓ மை காட்.. ஐபோன் பயனர்கள் செய்யவே கூடாத 3 விஷயங்கள்..

IP68 சான்றிதழ் என்றால் என்ன? ஐபோன் சாதனங்கள் IP68 சான்றிதழ் வழங்கப்பட்ட சாதனங்களாகும். IP68 என்பது வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் தரத்தை வெளிப்படுத்துகிறது. IP68 சான்றளிக்கப்பட்ட சாதனைகளை 1.5 மீட்டர் ஆழம் வரை நல்ல நீரில் பயன்படுத்தலாம். அதாவது உப்பு இல்லாத அல்லது கடல் நீர் இல்லாத இடங்களில் 30 நிமிடங்களுக்கு 1.5 மீட்டர் ஆழம் வரை சாதனம் பாதுகாப்பானதாக இருக்கும்.

கடல் நீர் ஐபோனுக்கு எமனா? அதற்கு மேல் செல்வதும், கடல் நீரில் ஐபோன் சாதனத்தை பயன்படுத்துவதும் படு ரிஸ்க் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் நீர் எந்த சாதனத்தில் பட்டாலும் அதை சோலி முடிந்தது என்றே அர்த்தம். இது ஐபோனிற்கும் பொருந்தும் என்பதை மறந்துவிடாதீர்கள். சரி, இப்போது நீரில் விழுந்த ஐபோனை என்ன செய்ய கூடாது என்ற விபரங்களை பார்க்கலாம்.

இந்த 3 விஷயங்களை செய்யவே கூடாது: நீங்கள் என்ன செய்தாலும், இந்த 3 விஷயங்களை செய்யவே கூடாது என்கிறது ஆப்பிள். இதுவரை ஆப்பிள் கூறி வந்த அறிவுரைகளை இப்போது அப்டேட் செய்துள்ளது. காரணம், பல ஐபோன் பயனர்களால் அடிக்கடி எழுப்பப்பட்ட புகார்களை வைத்து, ஆப்பிள் நிறுவனம் அதன் நிபந்தனைகளை இப்போது மாற்றி அமைத்துள்ளது. சரி, நேராக விஷயத்திற்கு செல்லலாம்.

ஓ மை காட்.. ஐபோன் பயனர்கள் செய்யவே கூடாத 3 விஷயங்கள்..

1. முதல் விஷயம், உங்கள் ஐபோன் சாதனம் ஈரமடைந்தால், நீங்கள் உடனே அதை உத்தரக்கூடாது. அதேபோல், உங்கள் ஐபோன் சாதனத்தை உலர வைப்பதாக நினைத்து, எக்ஸ்டர்னல் ஹீட் சோர்ஸ்களை பயன்படுத்த கூடாது. அதாவது, ஹீட்டர் (heater) மற்றும் ஹேர் ப்ளோவர் (hair blower) போன்ற கருவிகளை ஐபோன் மீது பயன்படுத்தக்கூடாது.

2. இரண்டாவதாக ஈரமான உங்கள் ஐபோன் சாதனத்தின் துளைகளில் ஏதும் பொருட்களை நுழைக்காதீர்கள். குறிப்பாக, காது குடையும் பஞ்சு மற்றும் டிஸ்யூ பேப்பர்களை சார்ஜிங் போர்ட் உள்ளே நுழைப்பதை ஒருபோதும் செய்யாதீர்கள்.

3. மூன்றாவதாக, உங்கள் ஈரமான ஐபோனை அரிசி நிறைந்த பைக்குள் போட்டு பூட்டி வைக்கும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இது ஐபோன் சாதனத்தை சேதப்படுத்தும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

நம்மால் மறுக்க முடியவில்லை: பெரும்பாலும், நீரில் விழுந்த ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன் என்று எதுவாக இருந்தாலும், நமது மக்கள் இந்த 3 விஷயங்களை தான் அடிக்கடி செய்து, அவர்களின் சாதனத்தின் உயிர்களை காப்பாற்றி இதுவரை சரி செய்து வந்தனர் என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் இந்த செயல்களை மொத்தமாக நிராகரித்து, இவை ஆபத்தானது என்று அறிவுரை வழங்கியுள்ளது.

ஐபோன் நீரில் விழுந்தால் என்ன தான் செய்ய வேண்டும்? இதற்கு பதிலாக, நீரில் விழுந்த ஸ்மார்ட்போனை 24 மணிநேரம் தானாக காற்றில் உளரவிடுவது பாதுகாப்பானது என்று ஆப்பிள் அறிவுரை வழங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
3 important things to avoid doing if your iPhone falls in water or gets wet apple warns
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X