Home
News

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக இருந்தாலும் கூட.. ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஏஐ ஜெனரேட்டிவ் சாட்பாட் ஆன சாட்ஜிபிடி ஆனது கூகுள் (Google) என்கிற மாபெரும் நிறுவனத்தின் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாம்பிராஜ்யத்தை சற்றே அசைத்து பார்க்கிறது என்பது உண்மைதான்!

இருந்தாலும் கூட "நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாட்ஸ்டர் டா" என்று கூறும்படியாக.. கூகுள் நிறுவனமானது அடிக்கடி ஏதாவது ஒரு தரமான சம்பவத்தை செய்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது ஏஐ ஜெனரேட்டிவ் சாட்பாட் ஆன ஜெமினிக்கு கொண்டுவரும் ஒரு புதிய திறனானது, சாட்ஜிபிடி-க்கு 'செக்மேட்' வைக்கும்படி உள்ளது!

ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!

அதென்ன திறன்? ஜெமினி ஏஐ-யின் வெப் வெர்ஷனிற்கு (Gemini AI Web Version).. அதாவது இணையத்தளம் வழியாக ஜெமினி ஏஐ அணுகும் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்த ஒரு முக்கிய அம்சம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் ஜெமினி ஆப்பிற்கு (Gemin App) வர உள்ளது.

அதென்ன அம்சம்? அது பயனர்களின் கேள்விக்கு நிகழ்நேர பதில்களை வழங்கும் ரியல்-டைம் ரெஸ்பான்சஸ் (Real-time responses) அம்சமாகும். இதன் மூலம் ஜெமினி ஆப் ஆனது ஒரு உள்ளுணர்வு மிக்க ஏஐ சாட்பாட் ஆக மேம்படுதத்பப்படும். மேலும் பயனர்களால் உடனடி பதில்களை பார்க்க முடியும். அதாவது கேள்விக்கான முழு பதிலும் உருவாக்கப்பட்டு, அது லோட் ஆகும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!

ஜெமினி ஆப்பிற்கு வரும் இந்த ரியல்-டைம் ரெஸ்பான்சஸ் ஆனது கேட்கப்படும் கேள்வியின் வகையை பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். மேலும் இந்த அம்சமானது ஜெமினி ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிலிருந்து (Gemini App Settings Menu) இயக்கப்படும்படி இருக்கும்.

ஒருமுறை இந்த அம்சம் / திறன் இயக்கப்பட்டதும், கூகுளின் ஜெமினி ஏஐ சாட்பாட்டிலிருந்து கிடைக்கும் பதில்கள் நிகழ்நேரத்தில்.. முன்பை விட வேகமாக காட்டப்படும். இப்போதைக்கு, கூகுள் நிறுவனம் இந்த அம்சத்தை சோதனை கட்டத்தில் தான் வைத்துள்ளது. வரும் நாட்களில் இது தகுதியான ஸ்மார்ட்போன்களில் வெளியிடப்படலாம்.

ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!

எலான் மஸ்க்கின் க்ரோக் ஏஐ: டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் எக்ஸ் (X) ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆன எலான் மஸ்க் (Elon Musk), தனது சொந்த ஏஐ சாட்பாட் ஆன க்ரோக் ஏஐ-ன் இரண்டாவது வெர்ஷன் (Grok 2 AI) பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்றும் கூறி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-5 வெர்ஷன்: ஓப்பன்ஏஐ நிறுவனமானது, கூடிய விரைவில் அதன் சாட்ஜிபிடி-5 வெர்ஷனை (ChatGPT 5 Version) ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜிபிடி 5 (GPT 5) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வெர்ஷன் ஆட்டோநமஸ் முறையில் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் போன்ற புதிய திறன்களை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக கூகுளின் ஜெமினிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வேலட் ஆப்பை (Google Wallet App) ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்காகவும் அறிமுகம் செய்த மறுநாளே.. ஜெமினி ஆப்பிற்கான இந்த புதிய மாற்றத்தில் வேலை செய்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூகுள் வேலட் ஆப்பை பொறுத்தவரை, தற்போது இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

கூகுள் வேலட்டின் அறிமுகமானது கூகுள் பே ஆப்பை காலி செய்யுமா? கடந்த 2011 இல் அறிமுகமாகி பின்னர் 2018 இல் கூகுள் பே ஆக மாற்றப்பட்ட கூகுள் வேலட் ஆனது இப்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூகுள் பே ஆப்பிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அது வழக்கம்போல செயல்படும்.

அதாவது கூகுள் நிறுவனமானது கூகுள் பே மற்றும் கூகுள் வேலட் ஆகிய இரண்டையும் தனித்தனியான ஆப்களாக வழங்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் கூகுள் வேலட் ஆப்பை பயன்படுத்துபவர்களால் தங்கள் நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும், ஆன்லைனிலும் ஃபிசிக்கல் ஸ்டோர்களிலும் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும், என்எப்சி-எனேபிள்டு டெர்மினல்களில் தங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி டேப் அன்ட் பே செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Google Gemini App to Get Real Time Responses Soon and Answer Quickly Like ChatGPT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X