Home
Mobile

இதோட மே.2-ல் தான் அடுத்த புது போன்.. இந்த 2 போன்களின் அறிமுகத்தோடு ஏப்ரல் மாசம் முடியுது.. என்னென்ன மாடல்கள்?

இந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே "போதும் போதும்" என்கிற அளவிற்கு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி விட்டன. இருப்பினும் கூட இன்னும் 4 புதிய போன்களின் அறிமுகத்துடன் இந்த ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதோடு மே 2-ல் தான் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் தொடங்கும்.

அப்படியாக இந்த ஏப்ரல் மாதத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphone).. எந்தெந்த தேதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? மே 2 ஆம் தேதியன்று என்ன ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

இந்த 2 போன்களின் அறிமுகத்தோடு ஏப்ரல் மாசம் முடியுது!

1. ரியல்மி நார்சோ 70எக்ஸ் (Realme Narzo 70x): ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலையை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே, 45W சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், 50மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை பேக் செய்யலாம்.

இந்த 2 போன்களின் அறிமுகத்தோடு ஏப்ரல் மாசம் முடியுது!

2. ஐக்யூ இஸட்9 சீரீஸ் (iQOO Z9 Series): ஐக்யூ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சீரீஸின் கீழ்.. ஐக்யூ இஸட்9 (iQOO Z9), ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x) மற்றும் ஐக்யூ இஸட்9 டர்போ (iQOO Z9 Turbo) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகவுள்ளன.

இம்மூன்று மாடல்களுமே ஏப்ரல் 24 ஆம் தேதி சீனாவில் நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும். இந்தியாவில் ஏற்கனவே ஐக்யூ இஸட்9 மற்றும் ஐக்யூ இஸட்9 ப்ரோ என்கிற பெயரில் ஐக்யூ மாடல்கள் வெளியாகிவிட்டன என்பதால் இந்த 3 மாடல்களில் எதெல்லாம், என்னென்ன பெயரின்கீழ் இந்தியாவிற்கு வரும், எப்போது வரும் என்கிற விவரங்கள் எதுவும் இல்லை.

இந்த 2 போன்களின் அறிமுகத்தோடு ஏப்ரல் மாசம் முடியுது!

3. விவோ வி30இ (Vivo V30e): விவோ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற மே 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலையை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, விவோ வி30இ ஸ்மார்ட்போன் ஆனது லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ரியல்மி 12 சீரீஸ் (Realme 12 Series) மாடல்களில் உள்ள ரவுண்ட் கேமரா மாட்யூலை போலவே 'ஜெம்-கட்' வடிவமைப்புடன் வரும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா + ஆரா லைட்டுடன் கூடிய இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டிருக்கும்.

இந்த 2 போன்களின் அறிமுகத்தோடு ஏப்ரல் மாசம் முடியுது!

முன்பக்கத்தில் 50எம்பி ஐ ஆட்டோஃபோகஸ் செல்பீ கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச்14, ஐபி64 றெரிங் போன்ற அம்சங்களையும் பேக் செய்யலாம்.

அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் புதிய ஸ்மார்ட்போன்களின் பட்டியல்: ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) வலைத்தளம் வழியாக ரூ.14,999 என்கிற சலுகை விலையின் கீழ் விற்பனைக்கு வரும்.

மோட்டோ ஜி64 5ஜி (Moto G63 5G) வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா (Motorola India ) வலைத்தளம் வழியாக ரூ.14,999 க்கு விற்பனைக்கு வரும். கடைசியாக விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஏப்ரல் 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா (Vivo India) வலைத்தளம் வழியாக ரூ.13,999 க்கு விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Upcoming Smartphone Launches Realme Narzo 70x iQOO Z9 Turbo Vivo V30e Launch Date Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X