ஆர்டர் தெறிக்க விடுறாங்க.. 2 லேட்டஸ்ட் iPhone-கள் மீது நம்ப முடியாத பிளாட் டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்கள்?
ஒருவேளை புதிய ஐபோன் 15 அல்லது சற்றே பழைய ஐபோன் 14 மாடலை வாங்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு இருந்தால், இதுவே அதற்கான "லாபகரமான" வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் மேற்கண்ட 2 ஐபோன்களுமே தற்போது குறைக்கப்பட்ட விலையின்கீழ் வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் நடக்கும் பிக் அப்கிரேட் சேல் (Big Upgrade Sale) என்கிற சிறப்பு விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 14 (iPhone 14) ஆகிய இரண்டு மாடல்களுமே தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஐபோன் 15 மடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.66,999 க்கு பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அசல் விலை ரூ.79,900 ஆகும்.

அதாவது ஐபோன் 15 மீது தற்போது ரூ.9,901 என்கிற நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. உண்மையிலேயே இதுவொரு மிகப்பெரிய பிளாட் டிஸ்கவுண்ட் (Flat Discount) ஆகும். ஐபோன் 15 மாடலானது இதற்கு முன் இவ்வளவு பெரிய தள்ளுபடியை கண்டதில்லை என்றே கூறலாம். பிளாட் டிஸ்கவுண்ட் தவிர்த்து எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Creadit Card) வழியாக கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியை பெறலாம். இப்படியாக ஐபோன் 15 மாடலின் இறுதி விலையை ரூ.65,999 ஆக குறைக்கு முடியும்.
மறுகையில் உள்ள ஐபோன் 14 மாடலின் 128ஜிபி சேஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.56,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அசல் விலை ரூ.69,900 ஆகும். அதாவது பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 14 மீது ரூ.12,901 பிளாட் டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது என்று அர்த்தம்.

ஐபோன் 15-ஆ? ஐபோன் 14-ஆ? இரண்டில் எதை வாங்கலாம்? இந்த கேள்விக்கான பதில் உங்களுடைய பட்ஜெட் மற்றும் தேவைகளை (Budget and Needs) பொறுத்து வேறுபடும். உங்களுக்கு பட்ஜெட் ஒரு பிரச்சனையே இல்லை என்றால், நீங்கள் ரூ.65,000 வரை செலவு செய்ய தயாராக இருந்தால் - ஐபோன் 15 மாடலை வாங்குவது நல்லது!
ஒப்பீட்டளவில், இது பழைய ஐபோன் 14 மாடலை விட குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை (Significant improvements) கொண்டுள்ளது. இது நேர்த்தியான வடிவமைப்பு, துடிப்பான டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட கேமரா திறன்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. (முன்னரே குறிப்பிட்டப்படி) பேங்க் ஆபரை சரியாக பயன்படுத்தினால் இதன் விலையை ரூ.65,999 ஆக குறைக்க முடியும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 15 மாடலானது பஞ்ச்-ஹோல் டிசைனை (Punch-hole Design) பெற்றுள்ளது, இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) உடனான டிஸ்பிளேவை பேக் செய்கிறது. கேமரா பிரிவில் குறிப்பிடத்தக்க அப்கிரேட் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் 48 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமராவானது 'ரிச்' ஆன மற்றும் 'ஷார்ப்' ஆன புகைப்படங்களை (Rich and Sharp Photos) வழங்குகிறது.
மேலும் ஆப்பிள் ஐபோன் 14 உடன் ஒப்பிடும்போது ஐபோன் 15 மாடலின் பேட்டரியானது "சிறிய அளவிலான" மேம்பாட்டினை பெற்றுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 15 மாடலானது 2 நாட்கள் என்கிற பேட்டரி லைஃப்பை (2 Days Battery Life) வழங்கும். ஆனால் உண்மையில் இது, சராசரி பயன்பாட்டின் கீழ் இது ஒரு நாளுக்கும் குறைவான பேட்டரி லைஃப்பையே வழங்குகிறது.
ஐபோன் 14 மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 6.06-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட் (Apple A15 Bionic Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications








