iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!

|

மூளையைப் பயன்படுத்தி உங்கள் ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள்.! இது சாத்தியமான நவீனமயமான ஹை-டெக் காலத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரை இப்படி ஒரு செய்தியை ஆப்பிள் ஐபோன் (iPhone) பயனர்கள் யாருமே யூகித்துக் கூட பார்த்திருக்க முடியாது.! மூளை மூலம் ஐபோன் சாதனங்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மூளையைப் பயன்படுத்தி iPhone அல்லது iPad ஐக் கட்டுப்படுத்த முடியுமா?

மூளையைப் பயன்படுத்தி iPhone அல்லது iPad ஐக் கட்டுப்படுத்த முடியுமா?

நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட Synchron என்ற நிறுவனம், "Synchron Switch" என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இது கை, கால் செயல்படாத நோயாளிகளுக்கு ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.

உடல் நலம் முடியாதவர்கள் தங்கள் மூளையைப் பயன்படுத்தி iPhone அல்லது iPad ஐக் கட்டுப்படுத்த முடியும் என்று சிங்க்ரான் நிறுவனம் கூறியுள்ளது.

மூளையில் நிறுவப்படும் சிப்

மூளையில் நிறுவப்படும் சிப்

செமாஃபோரின் (Semafor) கூற்றுப்படி, "ஸ்டென்ட்ரோட்" (Stentrode) எனப்படும் சென்சார்களின் வரிசை இரத்தக் குழாய் வழியாக மூளையின் மேற்புறத்தில் செருகப்படுகிறது.

நோயாளியின் மார்பில் இருந்து சின்க்ரான் ஸ்விட்சைப் பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களை இது கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மூளையில் நிறுவப்படும் சிப் மூலம் இது இயங்குகிறது.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

சிங்க்ரான் சுவிட்ச் மூலம் ஐபோனை மூளை வைத்து இயக்கலாம்.!

சிங்க்ரான் சுவிட்ச் மூலம் ஐபோனை மூளை வைத்து இயக்கலாம்.!

மெல்போர்னில் உள்ள ஓய்வுபெற்ற மென்பொருள் விற்பனையாளரான ரோட்னி கோர்ஹாம், அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (amyotrophic lateral sclerosis) அல்லது ஏஎல்எஸ் (ALS) என்ற நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது உடல் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதனம் தான் இந்த சிங்க்ரான் சுவிட்ச்.

ஆறு நோயாளிகளை வைத்து சோதனை செய்யப்பட்ட முயற்சி வெற்றி.!

ஆறு நோயாளிகளை வைத்து சோதனை செய்யப்பட்ட முயற்சி வெற்றி.!

Synchron ஆனது Synchron Switch சாதனத்தைப் பயன்படுத்தும் ஆறு நோயாளிகளைக் கொண்டுள்ளது. Gorham தான் ஆப்பிள் தயாரிப்புடன் Synchron Switch சாதனத்தைப் பயன்படுத்திய முதல் நபர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

iOS மற்றும் Apple தயாரிப்புகளில் இந்த ஸ்விட்சை பயன்படுத்தி சோதனை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் ஆப்பிள் டிவைஸ்கள் உலகம் முழுக்க பறந்து விருந்து எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.

சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

டைப் செய்யாமலே ஐபோனில் மெசேஜ் அனுப்பிய நபர்.!

டைப் செய்யாமலே ஐபோனில் மெசேஜ் அனுப்பிய நபர்.!

Synchron Switch மூலம், கோர்ஹாம் அவர்களின் எண்ணங்கள் iPadல் செயலாக மாற்றப்படுகின்றன. கோர்ஹாம் கால் விரல்களை தட்டி, இந்த ஸ்விட்சை பயன்படுத்த துவங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் நினைக்கும் போது ஐபேட் அவரது கால் தட்டுவதை விரல் தட்டாகப் பதிவு செய்கிறது. அவரது Synchron Switch ஐப் பயன்படுத்தி, கோர்ஹாம் தனது iPadல் இருந்து ஒற்றை வார்த்தை டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்ப முடியும் என்று Semafor தெரிவிக்கிறது.

காலால் தட்டி கூட ஐபோனை இயக்கலாம்.!

காலால் தட்டி கூட ஐபோனை இயக்கலாம்.!

இது முற்றிலுமாக அவரின் மூளையில் இருந்து வரும் ரியாக்ஷனை வைத்தும், கால் தட்டும் செயல்முறையை வைத்தும் செயல்படுகிறது.

இந்த கம்ப்யூட்டர் பிரைன் இம்பிளான்ட் மருத்துவ பரிசோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனமும் சின்க்ரான் ஆகும்.

சாதனத்தைப் பொருத்துவதற்கும் பராமரிப்பதற்கும் 70 மில்லியன் டாலரை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New Synchron Switch Can Now Control Your iPhone With Brain Signals

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X