Home
News

Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் சொந்த AI அம்சத்தை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதன் அடுத்த தலைமுறை ஐபோன் சாதனமான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) சீரிஸ் தொடரில் நிறுவனம் அதன் AI அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய வரவான ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) தொடர் ஸ்மார்ட்போன் சாதனங்களை நிறுவனம் வரும் செப்டம்பர் 2024 இல் வெளியிடவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், அதன் முந்தைய அனைத்து ஐபோன் சாதனங்களின் வெளியீடுகளையும் செப்டம்பர் (September) மாதத்தில் அறிமுகம் செய்யும் ஒரு வழக்கமான பழக்கத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்..

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro):

ஆகையால், இந்த 2024 ஆம் ஆண்டிற்கான புதிய லேட்டஸ்ட் ஐபோன் 16 சீரிஸ் (Latest iPhone 16) மாடல்களை நிறுவனம் இந்த செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபோன் 16 வரிசையில், மொத்தம் நான்கு மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) என்ற இரண்டு பேஸ் மாடலை கொண்டிருக்கும்.

மறுபுறம், ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என்ற இரண்டு ப்ரோ வேரியண்ட் மாடல்களை கொண்டிருக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஐபோன் 16 தொடருடன் ஆப்பிள் புதிய வடிவமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்தும் என்று வதந்திகள் குறிப்பிடுகின்றன. அதேபோல், குறிப்பாக ப்ரோ மாடல்கள் AI அம்சத்தை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) தொடர் A18 Pro சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் அதன் புதிய சிப்செட்டிற்கு "Pro" பிராண்டிங்கை தொடருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை நிறுவனம் அதன் போக்கை பின்பற்றவில்லை என்றால், இது A18 சிப்செட் (chipset) பெயருடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்முலம் ஐபோனை ஒரு குட்டி கம்ப்யூட்டர் போல மாற்றவுள்ளது ஆப்பிள்.

Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்..

ஆப்பிள் ஐபோன் 16 வரிசையில் A18 Pro சிப்செட்டா?

அப்பிளின் A18 Pro சிப்செட் ஆனது வழக்கமான மற்றும் சிக்கலான கம்ப்யூட்டிங் பணிகளைக் கையாளும் சாதனத்தின் திறன்களை மேம்படுதுவதோடு, இது ஐபோன் சாதனத்தில் AI அம்சத்தை இந்த முறை கொண்டு வரப்போகிறது என்று லீக் தகவல்கள் மிகவும் உறுதியாக தெரிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு - AI அம்சம் ஐபோன்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டில் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹைடாங் இன்டர்நேஷனல் டெக் ரிசர்ச்சின் ஜெஃப் புவை வெளியிட்ட லீக் தகவலின் படி, ஆப்பிள் சாதனத்தில் AI அம்சம் A18 ப்ரோ சிப்செட் மூலம் கொண்டு வர திட்டமிட்டபட்டுள்ளதாக லீக் தகவல் குறிப்பிடுகிறது. A18 Pro சிப் தற்போதைய A17 Pro ஐ விட பெரிய டை ஏரியாவைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் சக்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் அதிக டிரான்சிஸ்டர்கள் மற்றும் சிறப்பு கூறுகளை இதில் சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஐபோன் 15 ப்ரோவில் ஏற்பட்ட ஓவர் ஹீட்டிங் சிக்கல்களுக்கு பிறகு, நிறுவனம் இப்போதொரு பெரிய கூலிங் சிஸ்டத்தில் வேலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கூகுள் மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளதை போன்ற இன்பில்ட் AI அம்சத்தை வழங்க ஆப்பிள் இப்போது முடிவு செய்து வேலை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், வரும் ஐபோன் 16 ப்ரோ தொடரில் ஆப்பிள் ரசிகர்கள் AI அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Pro May Advance On Device AI Feature With A18 Pro Chip To Increase Performance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X