Home
News

தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய ஐபோன் சாதனமான ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) வரிசையில் நிறுவனம் இந்த முறை 2 புதிய நிறங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 16 பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள் இதோ.

ஐபோன் 16 சீரிஸ் வரிசையில், ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என்று மொத்தம் 4 ஸ்மார்ட்போன் மாடல்கள் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இவை வரும் செப்டம்பர் 2024 உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்..

ஐபோன் 16 வரிசையில் வரும் 2 புதிய நிறங்கள்:

வெளிவரவிருக்கும் புதிய ஐபோன் 16 சாதனங்கள் iOS 18 அம்சத்தை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு சீரிஸ் இன் கீழ், புதிய நிறங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அப்படி இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய நிறங்களை ஐபோன் 16 சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய நிறங்களை பெரும் சாதனமாக ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் இடம்பெறும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சிக்னேச்சர் நிறமாக ரோஸ் (Rose) கலர் ஐபோன் சாதனம் இடம்பெறப்போகிறது. இது ரோஸ்மில்க் (rosemilk) போன்ற லைட் நிறத்தை குறிக்கிறது.

இதற்கு நேர்மறையாக நிறுவனம் ஸ்பேஸ் பிளாக் என்ற மற்றொரு அடர்ந்த நிறத்தையும் அறிமுகம் செய்கிறது. இந்த இரண்டு நிறங்களும் டைட்டானியம் சேஸிஸ் கொண்ட ஐபோன் 16 ப்ரோ வரிசை மாடலில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர ஐபோன் 16 சீரிஸ் சாதனங்கள் வழக்கமான கிரெய் மற்றும் வைட் நிறங்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்..

ஐபோன் 16 இல் எதிர்பார்க்கப்படும் A18 மற்றும் A18 Pro பயோனிக் சிப்:

மொத்தமாக இந்த முறை ரோஸ், ஸ்பேஸ் பிளாக், கிரெய் மற்றும் வெள்ளை ஆகிய 4 நிறங்களில் ஐபோன் 16 மாடல்கள் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 15 மாடலில் ரெகுலர் பிளாக் என்ற ஒரு நிறத்தில் ஐபோன் கிடைக்கின்றன. அதற்கும் ஸ்பேஸ் பிளாக் நிறத்திற்கும் ஏகபோக வித்தியாசங்கள் இருக்கப்போகிறது என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது.

இது எந்தவகையில் வித்தியாசப்படப்போகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. இது தவிர வரவிருக்கும் புதிய ஐபோன் 16 சீரிஸ் சாதனங்களில் என்ன அம்சங்கள் இருக்கும் என்று இப்போது பார்க்கலாம். ஐபோன் 16 ப்ரோ வேரியண்ட் மாடல்களில் நிறுவனம் A18 மற்றும் A18 Pro ஆகிய இரண்டு புதிய சக்தி வாய்ந்த பயோனிக் சிப்செட்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சிப்செட்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான இன்பில்ட் AI அம்சங்களை அணுக அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, ஐபோன் 16 சாதனங்கள் iOS 18 இயங்குதளத்தில் அவுட் ஆப் தி பாக்சில் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. AI அம்சத்தை பெரும் முதல் ஐபோன் மாடலாக ஐபோன் 16 சீரிஸ் சாதனங்கள் இருக்க போகிறது.

ஐபோன் 16 பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும். ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை நடைபெறவிருக்கும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் iOS 18 அம்சங்களை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சாப்ட்வேர் அப்டேட்டை பெற போகும் சாதனங்களின் விபரங்களும் விரைவில் வெளியிடப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Pro and 16 Pro Max Might Get In Rose and Space Black Colours This September 2024 with iOS 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X