ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

|

உங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா அளவு உங்களுக்கு பற்றாக்குறையாக இருக்கிறதா? இன்னும் அதிக டேட்டா வேண்டுமா? குறிப்பாக, அதிக செலவில்லாமல் எக்கச்சக்க டேட்டா வேண்டுமா?

அதிலும், ரூ.500 விலைக்குள் மாதம் 3 TB டேட்டா வேண்டுமா? அப்படியானால், நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம்.

கம்மி விலையில் 3 TB டேட்டா கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?

கம்மி விலையில் 3 TB டேட்டா கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?

ரூ. 500 விலைக்குள் மாதம் 3 TB டேட்டா நன்மை கிடைத்தால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள்.! "பற்றாக்குறை" என்ற வார்த்தைக்கு வேலையே இருக்காதல்லவா.! உங்கள் தினசரி டேட்டா குறை திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகவே அறிமுகம் செய்யப்பட்ட ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) திட்டங்களை தான் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.

ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) வழங்கும் 3TB ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) வழங்கும் 3TB ரீசார்ஜ் திட்டங்கள்

இந்த விலை வரம்பிற்குள் மாதம் சுமார் 3TB அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும் பிராட்பேண்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் இப்போது வழங்குகின்றன. இந்த விலை வரம்பில் உங்களுக்கு ப்ரீபெய்ட் பைபர் திட்டம் (Prepaid fiber plans) மற்றும் போஸ்ட்பெய்ட் பைபர் திட்டம் (Postpaid fiber plans) ஆகிய 2 வகையான ரீசார்ஜ் திட்டங்களை இரண்டு நிறுவனங்களும் வழங்குகின்றன.

உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!

ரூ. 500 விலைக்குள் வாங்கக் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்.!

ரூ. 500 விலைக்குள் வாங்கக் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்.!

ஆம், குறைந்த விலையில் அதிகப்படியான 3 TB டேட்டா நன்மையை வழங்கும் இந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ரீசார்ஜ் பிளான்கள் அனைத்தும் பிராட்பேண்ட் (Broadband plan) திட்டங்களாகும்.

உங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஜியோஃபைபர் (JioFiber) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) திட்டங்கள் வாங்கக் கிடைக்கின்றன. இதில், இப்போது ரூ. 500 விலைக்குள் வாங்கக் கிடைக்கும் திட்டங்களின் நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

ஏர்டெல் வழங்கும் ரூ. 499 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ. 499 திட்டம்

முதலில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.500 விலைக்குள் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். ஏர்டெல் நிறுவனம் இந்த விலை வரம்பிற்குள் ஒரே ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது.

நாங்கள் பேசும் இந்தத் திட்டம் ரூ. 499 விலைக்கு வருகிறது. ரூ. 500 தான் உங்கள் பட்ஜெட் என்றால், இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தை நீங்கள் தவறவிடக்கூடாது.

2023-ல 2023-ல "இந்த" Vivo போனை தான் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க.! ஏன் தெரியுமா?

ரூ.499 விலையில் 3.3TB டேட்டாவுடன் இலவச நன்மைகளா?

ரூ.499 விலையில் 3.3TB டேட்டாவுடன் இலவச நன்மைகளா?

இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டம் உங்களுக்கு ரூ.499 விலையில் 40 Mbps வேகத்தில் ஒரு மாதம் முழுக்க 3.3TB டேட்டா நன்மையை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் வருகிறது.

இத்துடன், இந்த திட்டத்தின் பயனர்களுக்கு Xstream Premium, Wynk Music, FASTag கேஷ்பேக் போன்ற பல இலவச நன்மைகளும் கிடைக்கின்றன.

ரூ. 500 விலைக்குள் கிடைக்கும் ஜியோஃபைபர் திட்டங்கள்

ரூ. 500 விலைக்குள் கிடைக்கும் ஜியோஃபைபர் திட்டங்கள்

ஜியோஃபைபர் ரூ. 500 விலைக்குக் கீழ் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டமாகும். மற்ற இரண்டு திட்டங்களும் போஸ்ட்பெய்ட் திட்டங்களாகும். முதலில் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். நாம் இங்குப் பேசும் ப்ரீபெய்ட் JioFiber திட்டம் மாதத்திற்கு ரூ. 399 விலையில் வருகிறது. இது வரிகள் இல்லாத விலை என்பது கவனிக்கத்தக்கது.

1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!

ரூ. 399 விலைக்கு 3TB டேட்டாவா? அடேங்கப்பா.!  அசத்துறாங்களே.!

ரூ. 399 விலைக்கு 3TB டேட்டாவா? அடேங்கப்பா.! அசத்துறாங்களே.!

இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 30 Mbps வேகத்தில் 3.3TB மாதாந்திர டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இதனுடன் இலவச குரல் அழைப்பு நன்மையும் உள்ளது. பட்ஜெட் விலையில் இது ஒரு பிரமாண்டமான திட்டமாகும். அடுத்தபடியாக இருக்கும் போஸ்ட்பெய்ட் திட்டம் கூட இதே விலை வரம்பில் வருகிறது. ஜியோஃபைபரிலிருந்து ரூ. 399 விலைக்குக் கிடைக்கும் போஸ்ட்பெய்டு திட்டம் இதுவாகும்.

ரூ. 399 விலையில் JioFiber போஸ்ட்பெய்டு என்ன நன்மைகளை வழங்குகிறது?

ரூ. 399 விலையில் JioFiber போஸ்ட்பெய்டு என்ன நன்மைகளை வழங்குகிறது?

இந்த திட்டமும் நிறுவனம் வழங்கும் ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது. இது 30 Mbps வேகத்தில் 3.3TB மாதாந்திர டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை நிறுவனம் வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இதை ஆறு மற்றும் பன்னிரண்டு மாதங்களுக்கு வழங்குகிறது. ஆனால் அது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

500 ரூபாய்க்குள் பெஸ்ட் 3TB பிளான் இது மட்டுமே.!

500 ரூபாய்க்குள் பெஸ்ட் 3TB பிளான் இது மட்டுமே.!

JioFiber வழங்கும் ரூ. 500-க்கு கீழ் உள்ள கடைசி பிராட்பேண்ட் திட்டம் ரூ. 499 போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டம் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகிறது. இது 400+ டிவி சேனல்களுக்கான அணுகலுடன் வருகிறது. Universal+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, JioCinema, ShemarooMe மற்றும் JioSaavn போன்ற சந்தாக்கள் இலவசமாக கிடைக்கிறது.

கம்மி விலையில் அதிக டேட்டாவுடன் எது பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம்?

கம்மி விலையில் அதிக டேட்டாவுடன் எது பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம்?

இந்த போஸ்ட்பெய்டு JioFiber திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 30 Mbps பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குகிறது. ஏர்டெல் உடன் ஒப்பிட்டு பார்க்கையில், இதன் வேகம் குறைவாக இருக்கிறது.

ஆனால், நீங்கள் OTT நன்மைகளுடன் 3 TB டேட்டா நன்மையை வாங்க விரும்பினால், கட்டாயமாக உங்கள் தேர்வு ஜியோவிடம் இருந்து தான் தேர்வாக வேண்டும். வேகம் சற்று குறைவாக இருந்தாலும் கூட, ஜியோ சிறந்த பலனை வழங்குகிறது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

Airtel எப்படி அதன் சேவையை சிறப்பாக வழங்குகிறது?

Airtel எப்படி அதன் சேவையை சிறப்பாக வழங்குகிறது?

இங்கு நாங்கள் தனிப்பட்ட முறையில் கூடுதலாக சேர்க்க விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், ஏர்டெல் சேவை மிகவும் வலுவான வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவைக் கொண்டுள்ளது. தவறான இணைய இணைப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டால் சில மணிநேரங்களில், நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து சிக்கலைத் தீர்த்து வைக்கிறார். இதை நேரடியாக அனுபவித்த அனுபவம் எங்களுக்கு உள்ளது.

வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை ரொம்ப முக்கியம்.!

வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை ரொம்ப முக்கியம்.!

ஜியோவின் கஸ்டமர் கேர் சேவை சமமாக நன்றாகவோ அல்லது சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ இருக்கலாம். ஜியோவுடன் நேரடியான அனுபவம் கிடைக்காததினால் எங்களால் சரியான கருத்தைத் தெரிவிக்க முடியவில்லை. ஜியோ ஒரு முன்னணி நிறுவனம் என்பதனாலும், நிறுவனம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நகரங்களில் ஏராளமான சேவை மையங்களை வைத்துள்ளதால், வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை சிறப்பாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Jio and Airtel Fiber Plans With 3TB Data Benefits Under Rs 500

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X