WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் என்று எதை அனுப்ப வேண்டுமானாலும், அதற்கு இன்டர்நெட் சேவை கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், இப்போது அது ஒட்டுமொத்தமாக மாறப்போகிறது. இன்டர்நெட் இல்லாமல் ஃபைல் ஷேரிங் செய்ய பீச்சர் வருகிறது. எப்போது தெரியுமா?
இப்போதெல்லாம், பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்களை கூட பார்க்க முடியும். ஆனால், வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களை பார்க்க முடியாது. ஏனென்றால், மேசேஜ் அனுப்புவது, ஸ்டேட்டஸ் வைப்பது முதல் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் போன்ற பல தரப்பட்ட ஃபைல்களை பகிர்வது வரையில் வாட்ஸ்அப் மூலம் செய்து கொள்ள முடிகிறது.

சொல்லப்போனால், நண்பர்கள், உறவினர்கள் போன்ற நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ளவது மட்டுமல்லாமல், அலுவலகம் சார்ந்த தொடர்புக்கும் தவிர்க்க முடியாத ஆப்பாக வாட்ஸ்அப் மாறிவிட்டது. இதனால், நாளுக்கு நாள் வாட்ஸ்அப்பில் யூசர்களின் தேவைக்கு ஏற்ப புதிய பீச்சர்கள் (WhatsApp New Feature) மற்றும் அப்டேட்கள் (WhatsApp Update) கொண்டு வரப்படுகின்றன.
ஆனால், இப்போது வரப்போகும் வாட்ஸ்அப் ஆஃப்லைன் ஃபைல் ஷேரிங் பீச்சர் (WhatsApp Offline File Sharing Internet) ஒட்டுமொத்த யூசர்களையும் அறக்க பறக்க செய்துள்ளது. ஏனென்றால், இன்டர்நெட் இல்லாத நேரத்தில் முதலில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களையே நாம் அதிகம் மிஸ் செய்வோம்.
அதே நேரத்தில் இன்டர்நெட் இல்லாமலும் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் போன்ற ஃபைல்களை அனுப்ப முடிந்ததால் எப்படி இருக்கும். அதையே இந்த புதிய பீச்சர் கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சரானது, பியர்-டு-பியர்-ஃபைல்-ஷேரிங் ஆப்களை (Peer-to-peer file-sharing Apps) போலவே சேவையை வழங்க இருக்கிறது.
இந்த பீச்சர் எப்படி வேலை செய்கிறது? ப்ளூடூத் மூலம் அருகிலுள்ள டிவைஸ்களை ஸ்கேன் செய்து இந்த பீச்சரை பயன்படுத்த முடியும். ஆனால், இதற்கு சிஸ்டம் பர்மிஷன் (System Permission) கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆஃப்லைனில் பகிரப்படும் ஃபைல்களானது, பெறுபவரை தவிர வேறு யாருக்கும் செல்லாமல் என்க்ரிப்ட் செய்யப்படுவதால் இது தேவைப்படுகிறது.
ஆகவே, ஆஃப்லைனில் பகிரப்படும் போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமென்ட்ஸ் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பை உறுதி செய்து கொள்ளலாம். அதேபோல இந்த பீச்சரை பயன்படுத்தும் போது ப்ளூடூத் ஸ்கேனிங் மூலம் அருகில் இருக்கும் வாட்ஸ்அப் கொண்ட மொபைல்கள் காண்பிக்கப்படும். அதுவும் நீங்கள் அனுப்பும் ஃபைல்களை பெற விரும்பும் நபர் அந்த பீச்சரை ஆன் செய்திருக்க வேண்டும்.
ஆகவே, வாட்ஸ்அப் யூசர்கள் யாருக்கு ஃபைல்களை அனுப்ப வேண்டும். யாரிடம் இருந்து ஃபைல்களை பெற வேண்டும் என்பதை ஆஃப்லைன் ஃபைல் ஷேரிங் பீச்சரில் கொடுக்கப்படும் பர்மிஷன் மூலம் முடிவு செய்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், மொபைலில் இருக்கும் சிஸ்டம் ஃபைல்கள் (System Files) மற்றும் போட்டோ கேலரியை (Photo Gallery ) அணுகவும் பர்மிஷன் கேட்கப்படும்.
அதாவது, பியர்-டு-பியர் ஃபைல்-ஷேரிங் ஆப்களில் எப்படி ஷேர்ஐடியை பகிர்ந்து ஃபைல்கள் பரிமாறப்படுகிறதோ அதே போல இந்த பீச்சரும் சேவையை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் யூசர்கள் அதிகப்படியான மீடியா ஃபைல்களை பகிர்வதால், இந்த புதிய பீச்சர் மிகப்பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேமில்லை.
இந்த பீச்சர் எப்போது கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால், இந்த பீச்சர் ஏற்கனவே பீட்டா சோதனையில் இருக்கிறது. ஆகவே, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய தகவல்கள் WABetaInfo மூலம் வெளியாகி இருக்கிறது. ஆகவே, அதிகாரப்பூர்வமாக விரைவில் இந்த பீச்சர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications