Home
News

அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை.. ஸ்ட்ரைட்டா ரூ.10,000 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..

லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15) சாதனத்தை தள்ளுபடி விலையில் வாங்க ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ரூ.10,000 வரையிலான தள்ளுபடியை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விபரம் இதோ.

ஆப்பிள் (Apple) நிறுவனம், அதன் புதிய லேட்டஸ்ட் ஐபோன் 15 சாதனம் தற்போது விற்பனையில் உள்ளது. என்ன தான் ஐபோன் 15 சாதனங்கள் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் சாதனங்களாக இருக்கும் பொழுது, இன்னும் மக்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வம் காட்டி தான் வருகிறார்கள். ஐபோன் 15 சாதனத்தை வாங்க இப்போது அற்புதமான வாய்ப்பு கிடைக்கிதுள்ளது.

அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை..

iPhone 15 சலுகை விலை:

ஐபோன் 15 சாதனம் இந்திய சந்தையில் இப்போது ரூ. 72,999 சலுகை விலையில் வருகிறது. இந்த விலை 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் குறிப்பாக, HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4,000 வரையிலான கூடுதல் சலுகை கிடைக்கிறது. இதன் மூலம் ஐபோனின் 15 மாடலின் 128ஜிபி மாடல் விலை ரூ. 68,999 ஆக குறைந்துள்ளது.

இந்திய சந்தையில் ஐபோன் 15 சாதனம் ரூ. 79,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் இருந்து இப்போது ஐபோன் 15 சாதனத்தின் விலை ரூ. 10,000 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 15 சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் வாங்க விரும்புவோர் தற்போது கிடைக்கும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டால் சிறப்பானது.

ஐபோன் 15 சாதனத்தின் மீது இப்போது அட்டகாசமான எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ் சலுகை பற்றி பேசுகையில், ரூ. 55,500 விலை வரை வழங்கப்படுகிறது. உங்களிடம் ஐபோன் 14 அல்லது அந்த சீரிஸ் வரிசையில் உள்ள ஏதேனும் ஒரு சாதனம் இருக்கிறது என்றால், உங்களுக்கு ரூ. 55,500 வரையிலான முழு எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை..

iPhone 15 எக்ஸ்சேஞ் சலுகை:

அதற்கு பிந்தைய மாடல்களுக்கு ஒரு சில ஆயிரங்கள் முன்னர் பின்னர் விலை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ் சலுகையுடன் உங்கள் பழைய ஐபோன் மாடலை எக்ஸ்சேஞ் செய்து, புதிய மாடலுக்கு மாற்றிக்கொள்வது மிகவும் சிறந்தது. இந்த முறையில் ஐபோன் 15 சாதனத்தை வாங்க நீங்கள் நினைத்தால், உங்கள் கையில் இருந்து வெறும் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை மற்றும் செலுத்த வேண்டியதிருக்கும்.

iPhone 15 மாடலில் 6.1 இன்ச் OLED Super Retina XDR டிஸ்பிளே மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் காணப்பட்ட Dynamic Island வசதி இதில் உள்ளது. 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 12 மெகாபிக்ஸல் 2x டெலிபோட்டோ கேமரா ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளது.முன்புறம், 12 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமராவும் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் 15 மாடல் மொபைல்களில் டைப் C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. iPhone 15 மற்றும் iPhone 15 பிளஸ் ஆகிய இரண்டு மொபைல்களும் கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியாகியுள்ளன. இதன் ஸ்டோரேஜை பொறுத்தவரை இரண்டு மொபைல்களுமே 128GB, 256GB, 512GB ஆகிய மூன்று ஸ்டோரேஜ் வசதியில் வெளியாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 gets Rs 10000 Discount and Rs 55500 Exchange Offer In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X