குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
இந்தியா - ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகளை, பிலிப்பைன்ஸ் நாடு இப்போது பிரமோஸ் (BrahMos) ஏவுகணைகளை கொள்முதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது இந்தியா (India) மற்றும் ரஷ்யா (Russia) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த ஏவுகணையாகும்.
பிரம்மோஸ் மிஸைல் (BrahMos Missile) அல்லது பிஜே-10 (PJ-10) என்று அழைக்கப்படும் ஒரு நடுத்தர தூர ராம்ஜெட் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை (medium-range ramjet supersonic cruise missile) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரமோஸ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல், போர் கப்பல், போர் விமானங்கள் மற்றும் TEL ஆகியவற்றிலிருந்து ஏவக்கூடிய ஒரு நடுத்தர தூர ராம்ஜெட் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும்.

இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த பிரம்மோஸ் மிஸைல் (India's Most Powerfull BrahMos Missile):
இது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் NPO Mashinostroyeniya ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சில் உருவாக்கப்பட்ட மிஸைல் இது. இந்த ஏவுகணை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குறிவைத்து தாக்கும் சக்தி திறன்கொண்ட ஏவுகணை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியா மற்றும் ரஸ்சியா ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸை உருவாக்கியுள்ளனர்.
இந்த பிரமோஸ் ஏவுகணை P-800 ஓனிக்ஸ் (Oniks) ஐ அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைக்கு DRDO பிரம்மோஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது. இந்த பெயருக்கு பின்னணியில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? பிரமோஸ் என்ற பெயர் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி (Brahmaputra) மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா (Moskva) என்று நதிகளின் பெயரை குறிக்கிறது.
இந்த இரண்டு நாடுகளின் முக்கிய நதிகளின் பெயரின் அடிப்படையில் இந்த ஏவுகணைக்கு ஆராய்ச்சி குழு பிரமோஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது. குறிவைத்து நீர், நிலம் மற்றும் ஆகாயம் என்று பல இலக்குகளை தாக்கும் இந்த பிரமோஸ் ஏவுகணையை, இந்தியா மிகவும் சிறந்த ஆயுதமாக உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட தலைசிறந்த ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணையை விலைக்கு வாங்கிய பிலிப்பைன்ஸ் நாடு:
இந்த முயற்சியில் பிலிப்பைன்ஸ் நாடு பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியாவிடம் இருந்து வாங்கிய நாடாக கொள்முதல் செய்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்ட 2022 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின் படி, பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் நாடு சுமார் 375 மில்லியன் டாலர் செலவு செய்து இந்தியாவிடம் இருந்து வங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவிடமிருந்து 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணையை வாங்கிய வெற்றி நாடாக பிலிப்பைன்ஸ் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாடு செலுத்திய கட்டணத்திற்கு ஏற்ற பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா இன்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வழங்கியுள்ளது. பிரமோஸ் ஏவுகணையின் பாகங்களை இந்தியாவின் விமானப்படை விமானம் ஆன சி-17 (C-17) மூலம் இந்தியா அனுப்பியுள்ளது.
இதில் பிரமோஸ் ஏவுகணைக்கு சொந்தமான பேட்டரிகள் மற்றும் பல முக்கியமான ஏவுகணை உபகரணங்களை இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளுடன் வழங்கியுள்ளது. இந்திய விமானப்படை விமானம் சி-17 மூலம் பிரமோஸ் ஏவுகணையோ பிலிப்பைன்ஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அந்நாட்டு அரசிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications