மாபெரும் மாற்றம்.. iPhone 16 Pro-வில் பெரிய டிஸ்பிளே..என்ன சைஸ் தெரியுமா? தாறுமாறு டிசைன்..
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) ஸ்மார்ட்போன் சாதனம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதில் ஐபோன் 16 ப்ரோ புதிய-புதிய மாற்றங்களை பெரும் என்று லீக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
iPhone: ஆப்பிள் தனது புதிய ஐபோன் 16 தொடரை அதன் செப்டம்பர் நிகழ்வில் வெளியிடவுள்ளது. இதற்கு பிறகு ஐபோன் 16 சாதனங்களை சந்தைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 தொடர் போன்கள் பல புதிய மற்றும் பெரிய அப்டேட்களை பெரும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஐபோன் 15 போலவே, ஐபோன் 16 மாடல் போன்கள் மற்றொரு புதிய பட்டனைப் பெறுகிறது.

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro): கடந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவை அதிரடி பட்டனுடன் வெளியிட்டது. சமீபத்தில் வெளியான லீக் தகவலில் பிரத்தியேகமாக பெறப்பட்ட CAD ரெண்டர்களின் டிசைன் படங்கள் இடம்பெற்றுள்ளதை காண்பிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) சாதனத்தின் ரெண்டார் படங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro): இந்த சாதனத்தின் வலது பக்கத்தில் ஒரு பழக்கமான வடிவமைப்பு மொழியுடன் மற்றொரு பட்டனைக் காட்டுகின்றது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஐபோனில் முதன்முறையாக டைட்டானியம் சேசிஸ்களை கொண்டு வெளிவந்தது. இதன் வடிவமைப்பில் உள்ள மற்ற மேம்படுத்தல்கள் மெல்லிய பெசல்கள் மற்றும் வட்டமான மூலைகளை உள்ளடக்கியது. புதிய ஐபோன் 16 ப்ரோவும் இதே டிசைன் மொழியைப் பயன்படுத்துகிறது.
ஆக்ஷன் பட்டன்: ஆனால், இந்த முறை வழக்கமான பவர் பட்டனிற்கு கீழே "ஆக்ஷன் பட்டன்" என்ற வதந்தியைக் காட்டுகின்றன. இந்த பட்டன் புகைப்படம் மற்றும் வீடியோ பிடிப்புக்கான தூண்டுதலாக இருப்பதுடன், ஃபோக்கஸ் மற்றும் ஜூம் சரிசெய்தல் போன்ற அம்சங்களை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ சாதனம் 6.1" இன்ச் டிஸ்ப்ளேவுடன் 149.6×71.4×8.4 மிமீ அளவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே: தெரியாதவர்களுக்கு, ஐபோன் 15 ப்ரோ சாதனத்தின் பரிமாணம் 146.6x 70.6×8.25 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ சற்று உயரமாகவும், அகலமாகவும், தடிமனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீளம் மற்றும் அகலத்திற்கான புள்ளிவிவரங்கள் MacRumors பகிர்ந்தவற்றை உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், முந்தைய கசிவுகள், மெல்லிய பெசல்கள் மற்றும் புதிய பரிமாணங்களின் அடிப்படையில் 6.3" இன்ச் டிஸ்ப்ளேவை இந்த போன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கேமரா: iPhone 16 Pro அதே கேமரா பம்ப் வடிவமைப்பை வைத்திருக்கிறது. கேமரா பம்ப் 2019 இன் iPhone 11 Pro தொடரில் நாம் முதலில் பார்த்த பேசிக் வடிவமைப்பு லுக்கை அப்படியே பின்பற்றியுல்ளது. வித்தியாசமான ஃபிட்ஜெட் ஸ்பின்னர் போன்ற கேமரா பம்ப் மூலம் சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது. ஐபோன் 16 ப்ரோவில் மூன்று கேமரா சென்சார்கள், ஒரு LiDAR தொகுதி, ஒரு மைக்ரோஃபோன் மற்றும் ஒரு ஃபிளாஷ் உள்ளது.
பேட்டரி: ஐபோன் 16 ப்ரோ அதன் பெரிய டிஸ்பிளேவுடன், 5X டெட்ராபிரிசம் டெலிஃபோட்டோ கேமராவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ இதைத் தவறவிட்டது. ஆனால் ஐபோன் 16 ப்ரோ சாதனத்தில் சற்று அதிக இடவசதி இருப்பதால், இப்போது இது சாத்தியமாகிறது. கேமரா அமைப்பிற்கான பிற புதுப்பிப்புகளில் ப்ரோ மாடல்களுக்கு பிரத்யேகமாக 48MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. இது புதிய நிறங்களுடன் சற்று பெரிய 3,355mAh திறன் கொண்ட பேட்டரி பேக் செய்யுமென்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








