SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக எஸ்பிஐ வங்கி கொண்டுவரும் ஒவ்வொரு சேவைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் பழைய எண்ணை மாற்றி புதிய எண்ணை இணைப்பது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது தற்போது எஸ்பிஐ வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் வங்கி கடன் செலுத்துவது, பண பரிவர்த்தனை என அனைத்தும் எளிமையாக ஆன்லைன் மூலம் செய்துவிடலாம். இதுதவிர வெறும் 5 நிமிடங்களில் எஸ்பிஐ வங்கியில் உங்களால் வங்கி கணக்கும் கூட தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உங்களது சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால் அதை ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். பின்பு ஆன்லைனிலேயே ஏடிஎம் (ATM) கார்டுகளையும் விணப்பத்துக் கொள்ளலாம். இதுதவிர உங்களது செல்போன் நம்பர் மாற்றிவிட்டால், அந்த புதிய நம்பரை கூட ஆன்லைனிலேயே வங்கி கணக்கில் எளிமையாக மாற்றிவிடலாம். அதாவது அருகில் உள்ள ஏடிஎம் மூலம் புதிய மொபைல் எண்ணை எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

வழிமுறை-1 முதலில் உங்களது அருகில் இருக்கும் எஸ்பிஐ ஏடிஎம் (SBI ATM) மையத்திற்கு செல்லுங்கள். அந்த ஏடிஎம்-இல் Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
வழிமுறை-2: அடுத்து உங்களது ஏடிஎம் பின் நம்பரை பதிவிட்டு Mobile number registration என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் திரையில் தோன்றும் Change mobile number ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அதன்பின்னர் உங்களது பழைய மொபைல் எண்ணை பதிவிட்டு Enter கொடுத்து, புதிய மொபைல் எண்ணை கொடுத்து confirm கொடுக்க வேண்டும். அடுத்து உங்களது புதிய மற்றும் பழைய மொபைல் எண்களுக்கு ஓடிபி (OTP) வரும். அத்துடன் ஒரு மெசேஜ் ஒன்றும் வரும். அதை வைத்து 4 மணி நேரத்திற்குள் உங்கள் புதிய மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளலாம்.
அதேபோல் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில குறிப்புகளைப் ஏற்கனவே எஸ்பிஐ பகிர்ந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது உங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் கார்டு சரியாக ATM இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் மற்றும் இயந்திரத்தில் அல்லது அதைப் பற்றி சந்தேகத்திற்குரிய சாதனம் எதுவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
அடுத்து உங்கள் கையால் கீபோர்டை மறைத்து உங்கள் பின் நம்பரை உள்ளிடவும். யாரும் உங்கள் PIN நம்பரை பார்க்க முடியாத படி பார்த்துக்கொள்வது உங்களின் கடமையாகும். அதேபோல் உங்கள் PIN நம்பரை அவ்வப்போது மாற்றம் செய்வது மிகவும் பாதுகாப்பானது. உங்கள் வங்கி கணக்கு அறிக்கையைத் தொடர்ந்து கண்காணிப்பது பாதுகாப்பானது. வங்கி அறிக்கையில் ஏதேனும் திடீர் மாற்றம் இருந்தால் உடனே வங்கியை நேரில் சென்று அணுகவும்.


Click it and Unblock the Notifications