தாறுமாறு சேஞ்.. iPhone 16 விலை என்ன? ஐபோன் 15 ஐ விட குறைவா? இல்லை அதிகமா? வெளியான பிரைஸ் லீக்..
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபோன் மாடலான ஐபோன் 16 (iPhone 16) மாடலை iOS 18 உடன் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய ஐபோன் 16 சீரிஸில் உள்ள மொத்த போன்களின் விபரங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஐபோன் 16 சீரிஸ் வரிசையில் மொத்தம் 5 மாடல்கள் இந்த ஆண்டு இடம்பெற போகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வரவிருக்கும் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வழக்கமான ஹரிசாண்டல் கேமரா வடிவமைப்பை பெறாமல், புதிய வெர்டிகள் லைன் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை காண்பித்துள்ளது.

தில் ஐபோன் 16 சீரிஸ் சாதனங்கள் ஒற்றை கேமரா, டூயல் கேமரா மற்றும் ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வரும் என்பதையும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த வரிசையில், ஐபோன் 16 SE (iphone 16 SE), ஐபோன் 16 பிளஸ் SE (iPhone 16 Plus SE) என்ற பட்ஜெட் விலை பிரிவில் இரண்டு மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்.
அதேபோல், ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என்ற 3 மாடல்கள் வழக்கமான ஐபோன் சீரிஸ் இடங்களை நிரப்பும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 SE சாதனங்களை அதன் போர்ட்போலியோவில் இணைத்துள்ளது.
ஐபோன் 16 மாடல் 120Hz டிஸ்ப்ளே, டூயல்-கேமரா சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றுடன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களுடன் வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இதில் ப்ரோ வேரியண்ட் மாடல்கள் ஐபோன் 15 சாதனத்தில் இருந்த டிஸ்பிளே அளவை விட அதிகமான அளவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது OLED டிஸ்பிளேவாக இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.
ஐபோன் 16 சாதனம் A17 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்றும், 16 வரிசையில் உள்ள ப்ரோ மாடல்கள் A17 ப்ரோ பயோனிக் சிப்செட்களை பெரும் என்றும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. ஐபோன் 16 சாதனங்களில் ஸ்டேக்டு பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதனால், ஆற்றலும் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் 16 சாதனங்களில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் X75 மோடம் அம்சத்தை பயன்படுத்துவதனால், இது மிகவும் வேகமான 5ஜி இணைப்பை உறுதிப்படுத்துகிறது. அதேபோல், இந்த சாதனங்கள் வைஃபை 7 இணக்கத்துக்கான ஆதரவையும் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்த வரை, ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் மாபெரும் மாற்றத்தை இந்த முறை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 16 மாடல்களில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான AI அம்சம் கூட இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சாதனங்களை 3 புதிய நிறங்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் பேல் எல்லோவ், பிங்க் மற்றும் பிளாக் போன்ற நிறங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 16 சாதனங்களின் விலையை பற்றி பேசுகையில், இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 தொடர் ஸ்மார்ட்போன்களை விட 100 டாலர் அதிக விலை கொண்ட சாதனங்களாக இருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications