Home
Mobile

iPhone-க்கு வந்த இடி.. Google-இன் அடுத்த ஆப்பு.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

சோனி சென்சார் குவாட் கேமரா, டைட்டன் செக்யூரிட்டி சிப், ஓஎல்இடி டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஹேண்டி டிசைன் மற்றும் அல்ட்ரா பிரீமியம் லுக்கில் கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) போன் வெளியாக இருக்கிறது.

கூகுள் ஐ/ஓ 2024 (Google I/O) நிகழ்வானது, வரும் மே 14ஆம் தேதியில் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்வில் கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) மாடல் வெளியாக இருப்பதால், அதன் விலை, அம்சங்கள் மார்கெட்டில் கசிந்து வருகின்றன. அதிலும், ஐபோன் போன்ற டிசைன் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து விட்டது.

iPhone-க்கு வந்த இடி.. Google-இன் அடுத்த ஆப்பு.. SONY கேமரா மாடல்!

கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): இந்த பிக்சல் போனில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி எச்டிஆர் டிஸ்பிளே (OLED HDR Display) மாடலாகும். 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

7 வருட அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி 3 (Google Tensor G3) சிப்செட் மற்றும் டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) வருகிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 2 வேரியண்ட்கள் வர இருக்கின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கேமராவில் பட்டையை கிளப்பும் பிரீமியம் சென்சார்கள் வருகின்றன. குவாட் பிடி (Quad PD) மற்றும் குவாட் பயர் (Quad Bayer) சப்போர்ட் கொண்ட 64 எம்பி ரியர் கேமரா வருகிறது.

iPhone-க்கு வந்த இடி.. Google-இன் அடுத்த ஆப்பு.. SONY கேமரா மாடல்!

இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்787 (Sony IMX787) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் பிடிஏஎப் (PDAF) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சாருடன் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதுவொரு அல்ட்ரா வைடு ஆங்கிள் சப்போர்ட் கொண்ட கேமராவாகும். அதுமட்டுமல்லாமல், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

IP67 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & dust Resistant ) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. 2 மைக்ரோபோன்கள் (Microphones) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 20W வயர்டு சார்ஜிங் (Wired Charging) மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. அப்சிடியன் (பிளாக்), மின்ட் (கிரீன்), போர்சலேன் (லைட் பீச்) மற்றும் பே (ப்ளூ) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.51,390ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.56,810 ஆகவும் இருக்கிறது. மேற்கூறிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இருப்பினும், இதே அம்சங்கள் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 8a With 64MP Camera, 8GB RAM, 4500mAh Battery Launch Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X