Home
News

Apple-னாலே ஆடம்பரம்.. ஆல்ட்ரேஷன் செய்யப்பட்ட iPhone 15 Pro.. ரூ. 6 லட்சத்திற்கு விற்பனை.. அப்படி என்ன இருக்கு?

ஆப்பிள் (Apple) என்றாலே ஆடம்பரம். ஸ்மார்ட்போன்களில் ஆடம்பரம் என்றாலே அது ஐபோன் தான் என்று கூறும் அளவிற்கு ஆப்பிள் ஐபோன்கள் மிகவும் விலை உயர்ந்த சாதனங்களாக இருக்கின்றன. இன்னும் இந்த சாதனங்களின் விலையை அதிகரிக்க கேவியர் நிறுவனம் புதிய ஐபோனை வடிவமைத்துள்ளது.

யார் இந்த கேவியர் (Cavier)? இந்த நிறுவனம் ஏன் ஐபோனை இன்னும் அதிக விலை கொண்ட ஆடம்பரமான சாதனமாக மாற்றி விற்பனை செய்கிறது? பல லட்சம் செலவழித்து இந்த நிறுவனத்திடமிருந்து கஸ்டமைஸ் டிசைன் செய்யப்பட்ட ஐபோன் (iPhone) சாதனங்களை பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

Apple-னாலே ஆடம்பரம்.. ஆல்ட்ரேஷன் செய்யப்பட்ட iPhone 15 Pro..

காரணம், கேவியர் நிறுவனம் ஐபோன்களை விலை உயர்ந்த தங்கம், வைரம், இயற்கை தோல், தந்தம், விண்கற்கள் போன்ற மிகவும் அரிய பொருட்களை வைத்து வடிவமைத்து உருவாக்குகிறார்கள். இப்படி சமீபத்தில், வெளியான புதிய வரவான ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) சாதனங்களை நிறுவனம் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனத்தின் வடிவமைப்புடன் ஒத்து டிசைன் செய்துள்ளது.

சாதாரண ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வாங்கி, அதை ஆடம்பரமாக டிசைன் செய்து, சாதாரண விலையை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிக விலைக்கு கேவியர் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐபோன் மட்டுமின்றி சாம்சங் போன்களையும் கேவியர் நிறுவனம் தங்கம் மற்றும் வைரத்தை பயன்படுத்தி உருவாக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், இப்போது கேவியர் நிறுவனம் இப்போது Apple Vision Pro கருத்தை மையமாக வைத்து, ஒரு புதிய iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max இன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பதிப்பை அறிவித்துள்ளது. இந்த தனிப்பயனாக்கப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட்டில் உள்ள அதே அம்சங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Apple-னாலே ஆடம்பரம்.. ஆல்ட்ரேஷன் செய்யப்பட்ட iPhone 15 Pro..

பாரம்பரிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த சிறப்பு பதிப்பு ஆடம்பர பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கேவியர் கூறியுள்ளது. இதற்கிடையில், கேவியர் நிறுவனம் டெஸ்லா சைபர்ட்ரக் மூலம் ஈர்க்கப்பட்ட சாம்சங் எஸ்24 அல்ட்ரா கஸ்டமைஸ் டிசைன் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ​​இந்த புதிய ஐபோன் 15 ப்ரோ ஆப்பிள் விஷன் ப்ரோ கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

இது ஹெட்செட்டின் சர்க்கிள் வென்ட் மற்றும் சாதனத்தின் மேற்புறத்தில் கவர்ச்சிகரமான ஆரஞ்சு கோடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. அடிப் பகுதியில் விஷன் ப்ரோவின் முன் வடிவமைப்பு பிரதிபலிக்கிறது. ஆரம்பத்திலேயே பார்த்தால் அவ்வளவு சுலபமாக கவனிக்க முடியாது. இருப்பினும், ஆப்பிளின் ஹெட்செட்களை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் அல்லது பார்த்திருந்தால், இதன் நுணுக்கம் உங்களுக்குப் புரியும்.

இதே வடிவமைப்பு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாறுபாட்டிலும் காணப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆப்பிளின் ஹை-எண்டு ஐபோன் சாதனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. Apple Vision Pro இன்ஸ்பைர்டு iPhone 15 Pro சீரிஸ் விலை எவ்வளவு என்று பார்க்கையில், இதன் ஆரம்ப விலை $8,060 டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,68,000 லட்சமாகும். இது உண்மையில் மிகவும் அதிகமான விலை தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Caviar Luxury iPhone 15 Pro and 15 Pro Max Launched With Apple Vision Pro Inspired Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X