iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
உறுதியானது, ஆப்பிள் iPhone SE 4 ஸ்மார்ட்போன் சாதனம் OLED டிஸ்பிளேவுடன் வெளிவரப்போகிறது என்ற தகவல் இப்போது உறுதியாகியுள்ளது. இந்த டிஸ்பிளேவை (Display) சீன நிறுவனமான BOE நிறுவனத்திடம் இருந்து ஆப்பிள் (Apple) வாங்கவுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனமான ஐபோன் SE 4 (iPhone SE 4) மாடல் வரும் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற 2024 - 2025 இல் iPhone SE 4 ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய iPhone SE 4 ஸ்மார்ட்போன் LCD டிஸ்பிளேவிற்கு பதிலாக OLED டிஸ்பிளேவை பெறப்போகின்றன.

iPhone SE 4 ஸ்மார்ட்போனில் OLED டிஸ்பிளே உறுதி:
ஐபோன் SE தான் இன்னும் LCD தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரே ஐபோன் மாடலாக இருக்கிறது. இதை இப்போது ஆப்பிள் நிறுவனம் மாற்ற முடிவு செய்துள்ளது. ஆகையால், அடுத்து வரவிருக்கும் ஐபோன் SE 4 சாதனத்தில் நிறுவனம் OLED பேனல்களை வழங்க முடிவு செய்துள்ளது. இது பட்ஜெட் ஐபோன் சாதனத்தை பிரீமியம் விஷுவல் தரத்தை கைப்பற்ற அனுமதிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
LCD டிஸ்பிளேவுடன் ஒப்பிடும்போது OLED டிஸ்பிளேக்கள் பிரகாசமான கலர், தரமான கிளாரிட்டி மற்றும் சிறந்த ஒட்டுமொத்த விஷுவல் தரத்தை வழங்குகின்றன. இருப்பினும், Apple இன் முக்கிய கவனம் iPhone SE 4 போனுக்கான செலவுகளைக் குறைப்பதில் உள்ளது என்பதனால், 3 நிறுவனங்களிடம் இருந்து ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்பிளேவுக்கான செலவை விசாரித்துள்ளது.
OLED டிஸ்பிளேவை வழங்கும் நிறுவனங்களாக சாம்சங் (Samsung), BOE மற்றும் டியான்மா (Tianma) ஆகிய 3 நிறுவனங்கள் போட்டியிட்டன. இந்த OLED டிஸ்பிளேவுக்கான டெண்டர் போட்டியில் மூன்று நிறுவனங்களும் வெவ்வேறு விலையை கோட் செய்திருந்துள்ளனர். இதில் அதிகபட்ச தொகையாக Tianma நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் ஒரு OLED டிஸ்பிளேவிற்கு $40 டாலர் செலவாகும் என்று விலையை வழங்கியுள்ளது.

மறுபுறம், சாம்சங் நிறுவனம் $30 டாலர் முதல் $40 டாலர் விலைக்குள் OLED டிஸ்பிளேக்களை வழங்க முடியுமென்று ஆப்பிள் நிறுவனத்திடம் அதன் விலையை சமர்ப்பித்துள்ளது. இறுதியாக BOE நிறுவனமும் எதார்த்தமாக சாம்சங் வழங்கிய அதே விலையை வழங்கி இருந்தது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் வெறும் $25 டாலர் செலவில் OLED டிஸ்பிளேவை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கேட்ட விலையில் எந்தவித லாபமும் எங்களுக்கு கிடைக்கப்போவதில்லை, ஆகையால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகிக்கொள்கிறோம் என்று சாம்சங் நிறுவனம் ஆப்பிளிடம் கூறி விடைபெற்று கொண்டது. இறுதியில், BOE நிறுவனம் ஆப்பிள் கூறிய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு, இறுதியாக ஐபோன் SE 4 சாதனத்திற்கான OLED டிஸ்பிளேவை வழங்கும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துடன் BOE நிறுவனம் என்ன விலையை இறுதி செய்தது என்ற தெளிவான விபரம் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், iPhone SE 4 ஸ்மார்ட்போன்களுக்கான OLED டிஸ்பிளேவை வழங்கும் நிறுவனமாக BOE தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. iPhone SE 4 சாதனம் 6.1" இன்ச் கொண்ட OLED டிஸ்பிளேவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








