அடிச்சான் பாரு Apple.. iPhone 17 இல் புது மாற்றம்.. மொத்தமாக உருமாறும் ஐபோன் சாதனங்கள்.. என்ன மேட்டர் தெரியுமா
ஐபோன் சாதனங்கள் அடுத்த 2 வருடங்களில் முழுமையாக உருமாறப்போகிறது. அதற்கான வேலைகளை ஆப்பிள் நிறுவனம் இப்போது முழு வீச்சில் செய்து வருகிறது. சமீபத்திய தகவல் ஐபோன் 17 (iPhone 17) பற்றிய சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளன. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
iPhone 16: ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் வரிசையில் ஐபோன் 16 SE (iPhone 16 SE), ஐபோன் 16 பிளஸ் SE (iPhone 16 Plus SE), ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 SE), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய 5 மாடல்களை இடம்பெறும். இது வரும் செப்டம்பர் மாதம் உலகளவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 17: இதற்கு மத்தியில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் ஐபோன் 17 (iPhone 17) ஸ்மார்ட்போனில் ஆப்பிள் (Apple) நிறுவனம் என்ன டிஸ்பிளே வழங்கப் போகிறதென்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்போது பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நாம் LTPO OLED டிஸ்பிளேக்களை பார்க்க முடிகிறது. பல OEM-கள் இப்போது அவர்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த டிஸ்பிளேவை பயன்படுத்துகிறார்கள்.
ஐபோனில் LTPO OLED டிஸ்பிளே: இதை விரைவில் ஆப்பிள் நிறுவனம் கூட செய்யவுள்ளது. லோ-டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO) OLED பேனல்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தப்போகிறது. ஆப்பிள் தற்போது இந்த தொழில்நுட்பத்தை அதன் ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையான iPhone 17 மற்றும் iPhone 17 Plus மாடல் லோ-டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் சிலிக்கான் (LTPS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LTPO மற்றும் LTPS OLED டிஸ்ப்ளே: ஆப்பிள் இந்த LTPO மற்றும் LTPS OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை அதன் அனைத்து ஐபோன் 17 மாடல்களுக்கும் கொண்டு வரும் என்று தெரிகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 17 (Apple iPhone 17) தொடரின் மூலம் LTPO டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கு முற்றிலும் மாறும். மேலும் சீனாவை தளமாகக் கொண்ட BOE நிறுவனம் இந்த டிஸ்பிளேக்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
LTPO டிஸ்பிளே: தொழில்நுட்பம், மிகவும் பிரபலமான லோ-டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் சிலிக்கான் (LTPS) OLED போலல்லாமல், கசிவு மின்னோட்டத்தைக் குறைப்பதன் மூலம் குறைந்த பேட்டரி சக்தியைப் பயன்படுத்துகிறது. அதேபோல், இது அடாப்டிவ் புதுப்பிப்பு விகிதங்களை ஆதரிக்கிறது. இந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்களில் பிரபலமானது.

ஐபோன் 17 தொடர்: இருப்பினும், ஆப்பிள் இப்போதைக்கு இந்த தொழில்நுட்பத்தை அதன் ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே வழங்கவுள்ளது. ஐபோன் 16 தொடரில் 15 சீரிஸிலிருந்து வேறுபடுத்தும் காரணிகள் இருக்காது என்றும், ஐபோன் 17 தொடரில் சில கட்டாய மாற்றங்களைச் செய்ய ஆப்பிள் இந்த மேம்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை கொண்டு வரலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
iPhone SE 4: LTPO டிஸ்பிளேக்கான ஆப்பிளின் எதிர்பார்ப்புகளை BOE பூர்த்தி செய்யாவிட்டாலும், சப்ளையர் வரவிருக்கும் iPhone SE 4 மற்றும் பிற பழைய iPhone மாடல்களுக்கு LTPS OLED பேனல்களை வழங்கத் தொடங்கலாம். இது எல்ஜி மற்றும் சாம்சங்கில் இருந்து எல்டிபிஓ பொருட்களை வாங்க ஆப்பிள் நிறுவனத்தை கட்டாயப்படுத்தும். எப்படியிருந்தாலும், ஆப்பிள் ஐபோன் 17 தொடரின் மூலம் LTPO OLED பேனல்களுக்கு நிறுவனம் முழுமையாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications







