பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 உட்பட.. சற்றே பழைய ஆப்பிள் ஐபோன் மாடல்களின் மீது கிடைக்கும் சலுகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் படியான ஒரு டிஸ்கவுண்ட் ஆஃபர் ஆனது லேட்டஸ்ட் ஐபோன் 15 ப்ரோ மாடலின் மீது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரீடெயில் செயின் கம்பெனி (Retail chain company) ஆன விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல் மீது மிகப்பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. வழக்கமாக ஐபோன் 13, ஐபோன் 14 போன்ற வெண்ணிலா மாடல்களின் மீதுதான் இதுபோன்ற ஆஃபர்கள் கிடைக்கும். எனவே ஆப்பிளின் ப்ரோ வேரியண்ட் ஒன்றின் மீது கிடைக்கும் இந்த ஆஃபர் - உண்மையிலேயே கொஞ்சம் ஸ்பெஷல் தான்!

தற்போது விஜய் சேல்ஸ்-ல் ஐபோன் 15 ப்ரோ (iPhone 14 Pro) மாடலானது ரூ.1,28,200 என்கிற தொடக்க விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் ஒரிஜினல் ரீடெயில் விலை ரூ.1,34,900 ஆகும். அதாவது விஜய் சேல்ஸ் பிளாட்ஃபார்ம் ஆனது எந்த விதிமுறைகளும், நிபந்தனைகளும் இல்லாமல் ஐபோன் 15 ப்ரோ மீது ரூ.6,700 பிளாட் டிஸ்கவுண்ட்டை (Flat Discount) வழங்குகிறது.
இது தவிரத்து, ஐசிஐசிஐ (ICICI) வங்கி மற்றும் எஸ்பிஐ (SBI) வங்கி கார்டுகளின் வழியாக கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடியும் அணுக கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலையை ரூ.1,18,200 ஆக குறைக்க முடியும். அதாவது ஒட்டுமொத்தமாக உங்களுக்கு ரூ.16,700 நேரடி தள்ளுபடி கிடைக்கும். இந்த விலைப்புள்ளி இதுவரை ஐபோன் 15 ப்ரோ மாடலில் நாம் கண்டிராத அளவிலான மிக குறைந்த விலையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை கொண்டிருக்கவில்லை என்றால், மற்ற வங்கிகளுக்கான பிரத்யேக சலுகைகளையும் விஜய் சேல்ஸ் வழங்குகிறது. ஆனால் அதன்கீழ் கிடைக்கும் தள்ளுபடி தொகையானது ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளின் வழியாக நீங்கள் பெறுவதை விட சற்று குறைவாகவே இருக்கும்.
உங்களுக்கு ஐபோன் 15 ப்ரோ மாடலை வாங்கும் ஐடியா இல்லை என்றால்.. பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ஐபோன் 15 (iPhone 15) மாடலை வாங்கலாம். அங்கே இது 17% தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.65,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ஆபர் விலையாகும்.

அதே பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 (iPhone 14) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால், அது 15% தள்ளுபடியை பெற்று ரூ.69,900 க்கு பதிலாக ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐபோன் 13 (iPhone 13) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 11% தள்ளுபடியை பெற்று ரூ.59,900 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 15% தள்ளுபடியை பெற்று ரூ.89,900 க்கு பதிலாக ரூ.75,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 16% தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.66,999 க்கு வாங்க கிடைக்கிறது
சற்றே பழைய ஐபோன் 12 (iPhone 12) மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 15% தள்ளுபடியை பெற்று ரூ.49,900 க்கு பதிலாக ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது. மிகவும் பழைய ஐபோன் 11 (iPhone 11) மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ், ப்ராடெக்ட் ரெட் கலர் வேரியண்ட் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக ரூ.43,900 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications