மார்ச் 30 குள்ள ஆர்டர் போட்ருங்க.. இப்படி ஒரு டிஸ்கவுண்ட் பார்த்ததே இல்ல.. iPhone 15 முதல் iPhone 12 வரை!
ஆஃபர் விலையில் புதிய ஐபோன் மாடலை வாங்க விரும்பும் அனைவரும் உடனே பிளிப்கார்ட் வலைத்தளதிற்ரு செல்லவும். மன்த் எண்ட் மொபைல் ஃபெஸ்ட் என்கிற பெயரில் பிளிப்கார்ட் நடத்தும் சிறப்பு விற்பனையில், ஐபோன் 14 பிளஸ் உட்பட பல ஐபோன்கள் மீது நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது.
பிளிப்கார்ட்டின் மன்த் எண்ட் மொபைல் ஃபெஸ்ட் (Month End Mobile Fest) விற்பனையில், ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) மாடல் மீது தான் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலானது "கிட்டத்தட்ட" ஐபோன் 14-ல் உள்ள அம்சங்களையே பேக் செய்கிறது. ஆனால் இது பெரிய டிஸ்பிளே மற்றும் சற்றே பெரிய பேட்டரி உடன் வருகிறது.

இந்தியாவில் ஐபோன் 14 பிளஸின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷ ரூ.89,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 பிளஸை (iPhone 15 Plus) அறிமுகப்படுத்தியதும், பழைய ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலையில் ரூ.10,000 குறைத்தது. தற்போது இது பிளிப்கார்ட்டில் பல வகையான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற்று முன்னெப்போதும் கிடைக்காத விலையில் வாங்க கிடைக்கிறது.
தற்போது பிளிப்கார்ட்டில், ஐபோன் 14 பிளஸ் மாடலானது ரூ.12,901 என்கிற நேரடி தள்ளுபடியை (Direct Discount) பெற்று ரூ.66,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, சிட்டி பிராண்டட் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் (Citi-branded credit card EMI transactions) ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 14 பிளஸின் விலையை ரூ.64,999 ஆக குறைக்க முடியும்.

மேலும் நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு கூடுதலாக ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) கிடைக்கும். மேற்கண்ட அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலின் இறுதி விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைக்கலாம் (அதிகபட்சம் ரூ.20,000 க்குள் கொண்டு வரலாம்).
ஐபோன் 14 பிளஸ் மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் உள்ள, மேம்படுத்தப்பட்ட ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ,மாடலில் 5ஜி ஆதரவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடிக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, இதில் 12எம்பி மெயின் சென்சார் மற்றும் 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. ஐபோன் 14 பிளஸ் மாடலானது ப்ளூ , பர்பிள், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் என மொத்தம் 5வ கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன்கள் மீது கிடைக்கும் மற்ற சலுகைகளை பொறுத்தவரை, மிகவும் பழைய ஐபோன் 12 (iPhone 12) ரூ.49,900 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஐபோன் 15 (iPhone 15) மாடலின் பிங்க் கலர் ஆப்ஷன் ரூ.79,900 க்கு பதிலாக ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கிறது; மறுகையில் உள்ள ப்ளூ மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன் ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் ஐபோன் 13 (iPhone 13) மாடலை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட்டில் இது ரூ.59,900 க்கு பதிலாக ரூ.52,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14)மாடலானது அசல் அறிமுக விலையான ரூ.69,900 க்கு பதிலாக ரூ.56,999 க்கு வாங்கி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








