வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
இந்தியாவில் மிகவும் பிரபலமான Vu நிறுவனம் புதிய 43-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 43-இன்ச் மற்றும் 55-இன்ச் Vu சினிமா டிவி 2024 எடிஷன் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகல்களை இந்த பதிவில் இங்கே பார்க்கலாம்.
Vu சினிமா டிவி 2024 எடிஷன் அம்சங்கள் (Vu Cinema TV 2024 specifications): 43-இன்ச் மற்றும் 55-இன்ச் கொண்ட ஏர சினிமா டிவி 2024 மாடல்கள் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டேபிள் மவுண்ட் ஸ்டாண்ட், VESA வால் மவுண்ட் பிராக்கெட் ஆதரவுகளுடன் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் 4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே(4K IPS LED display) வதியுடன் வெளிந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய Vu ஸ்மார்ட் டிவிகள்.
எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் Vu சினிமா டிவி 2024 மாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த இரண்டு டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Vu நிறுவனம்.

சினிமா மோட், கிரிக்கெட் மோட், ALLM, கேம் மோட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த புத்தம் புதிய 43-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவியின் ஆடியோ அமைப்பும் அருமையாக உள்ளது.
அதாவது 50W சினிமாட்டிக் சவுண்ட் (50W Cinematic Sound) வழங்குகிறது இந்த புதிய ஏர சினிமா டிவி 2024 மாடல்கள். குறிப்பாக டால்பி ஆடியோ (Dolby Audio) அம்சம் இதில் உள்ளது. இதுதவிர சைட்-ஃபைரிங் டியூப் ஸ்பீக்கர்கள் (Side-firing tube speakers) இந்த டிவிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.
8ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் கொண்டுள்ளன இந்த 43-இன்ச் மற்றும் 55-இன்ச் கொண்ட Vu சினிமா டிவி 2024 மாடல்கள். எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இந்த டிவிகள் இய்குகிறது. மேலும் இந்த டிவியில் 1000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பிரபலமான ஆப் வசதிகளும் உள்ளன.

ஐஆர் (IR) மற்றும் புளூடூத் வாய்ஸ் அசிஸ்டண்ட் (Bluetooth Voice Assistant) கொண்ட ரிமோட் கொண்டுள்ளன இந்த Vu சினிமா டிவி 2024 மாடல்கள். அதேபோல் இந்த டிவிகளின் ரிமோட்களில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களும் உள்ளன. டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, I/O போர்ட்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவிகளில் உள்ளன.
Vu Cinema TV 2024 மாடல்கள் இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 43-இன்ச் மாடலை ரூ.25,999 விலையிலும், 55-இன்ச் மாடலை ரூ.34,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவிகளுக்கு 1 வருடம் வாரண்டி உள்ளது.
Photo courtesy: fonearena, Vu


Click it and Unblock the Notifications