ஸ்மார்ட்போன் பேட்டரி இனி தனியா வரணும்.! புது சட்ட சிக்கல்.! இது நன்மையா தீமையா?

|

கடந்த சில தசாப்தத்தில், ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் பல்வேறு போக்குகள் மாறிவிட்டன. எடுத்துக்காட்டாக, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் இப்போது மிகவும் அரிதானதாக மாறிவிட்டது. இதேபோல், முன்னோரு காலத்தில் ஸ்மார்ட்போன்கள் (smartphones) நீக்கக்கூடிய பேட்டரிகளுடன் (replaceble battery) வந்தன. இது நிச்சயமாக இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நிச்சயமாகப் பெரியவர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஸ்மார்ட்போன்களில் மீண்டும் ரீபிளேசபிள் பேட்டரிகளா?

ஸ்மார்ட்போன்களில் மீண்டும் ரீபிளேசபிள் பேட்டரிகளா?

நீக்கக்கூடிய பேட்டரிகளால் (removable smartphone battery) இருக்கும் பெரும் நன்மையே, உங்கள் போனில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதை உடனே நீங்கள் கழட்டி மாற்றக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஹேங் ஆகிவிட்டால், மக்கள் உடனே பேட்டரியை கழட்டி ரெஸ்டர்ட் செய்துவிட்டு, மீண்டும் அவர்களின் வேலையைச் செய்ய போனை ஆன் செய்துகொள்வார்கள்.

இன்றைய ஸ்மார்ட்போன்களில் நீங்கள் 'இதை' செய்ய முடியாது.!

இன்றைய ஸ்மார்ட்போன்களில் நீங்கள் 'இதை' செய்ய முடியாது.!

இதுபோன்ற செயல்களை எல்லாம் நீங்கள் இப்போது இருக்கும் ஸ்மார்ட்போன்களில் செய்திட முடியாது. இப்போதும் கூட, நீக்கக் கூடிய பேட்டரி கொண்ட அம்சம் ஒரு சில மாடல்களில் மட்டுமே அரிதாகக் காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போது வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இன்-பில்ட் பேட்டரிகளுடன் (in-built smartphone battery) மட்டுமே வருகின்றன.

ஆடிப்போன Apple சாம்ராஜ்ஜியம்.! iPhone தயாரிப்பை நிறுத்த முடிவு.! காரணம் என்ன?ஆடிப்போன Apple சாம்ராஜ்ஜியம்.! iPhone தயாரிப்பை நிறுத்த முடிவு.! காரணம் என்ன?

ஐபோன் முதல் எல்லா போன்களும் USB Type C போர்ட்-க்கு மாற கட்டாய சட்டம்.!

ஐபோன் முதல் எல்லா போன்களும் USB Type C போர்ட்-க்கு மாற கட்டாய சட்டம்.!

இவற்றை நாம் கழட்டி மாற்றம் செய்ய முடியாது. இது பல சிக்கல்களை உருவாக்குகிறது என்பதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் காரணமாக இது விரைவில் மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஐரோப்பிய யூனியன், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எதிர்காலத்தில் சார்ஜ் செய்ய USB Type C போர்ட்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களுக்கான உலகளாவிய தரநிலைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியது.

இதனால் சில பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டுமே இருக்கிறதா?

இதனால் சில பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டுமே இருக்கிறதா?

இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், குபெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு இந்த உத்தரவுக்கு இணங்க டிசம்பர் 28, 2024 வரை அவகாசம் உள்ளது.

இப்போது ​யூனியன், மாற்றக்கூடிய ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்குகளை (removable smartphone battery back) மீண்டும் கொண்டு வருவதற்கு முழு தொழிற்துறையையும் வலுவாக ஆயுதமாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது போல் தெரிகிறது.

இப்படி மாற்றம் செய்வதனால் சில பிளஸ் மற்றும் மைனஸ்களை நாம் சந்திக்க வேண்டியதுள்ளது.

இந்திய வானில் தோன்றிய மர்ம பொருள் ஏலியன் விண்கலமா? 3 நிமிடம் வெறித்து பார்த்த மக்கள்.!இந்திய வானில் தோன்றிய மர்ம பொருள் ஏலியன் விண்கலமா? 3 நிமிடம் வெறித்து பார்த்த மக்கள்.!

iOS மற்றும் Android இரண்டிற்குமே ஒரே சட்டமா?

iOS மற்றும் Android இரண்டிற்குமே ஒரே சட்டமா?

புதிய அறிக்கையின்படி, நீக்கக்கூடிய பேட்டரிகளை புதுப்பிக்க, iOS மற்றும் Android ஆகிய இரண்டு பிராண்டுகளும் உட்பட அணைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களைக் கட்டாயப்படுத்த ஐரோப்பா திட்டமிட்டுள்ளது.

ஐபோன்களைப் போலன்றி, ஆண்ட்ராய்டு மாடல்கள் பொதுவாக ஆரம்ப நாட்களில் மாற்றக்கூடிய பேட்டரி பேக்குடன் வந்தன. இருப்பினும், சில மேம்படுத்தல் காரணமாக இந்த முறை கைவிடப்பட்டது.

எதனால் ரீபிளேசபிள் பேட்டரி முறை கைவிடப்பட்டது தெரியுமா?

எதனால் ரீபிளேசபிள் பேட்டரி முறை கைவிடப்பட்டது தெரியுமா?

OEM-கள் அதிக சக்தி மற்றும் உபகரணங்களைச் சிறிய பிரேம்களில் அடைப்பதற்கு முன்பு இந்த முறை ஏற்றதாக இருந்தது.

ஆனால், இந்த முறை கைவிடப்பட்ட பிறகு தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களில் மிக இறுக்கமான சீல்கள் மூலம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் தூசி ரெசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கப்பெற்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாற்றக்கூடிய பேட்டரியை வைத்திருப்பது அத்தகைய முக்கியமான ஆயுள் அம்சத்திற்கு எதிராக வேலை செய்தது என்று கூறப்படுகிறது.

பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கிருக்கிறது?பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கிருக்கிறது?

ஸ்மார்ட்போன் பேட்டரிகளால் மக்கள் வாழ்கை எப்படி மாறியுள்ளது?

ஸ்மார்ட்போன் பேட்டரிகளால் மக்கள் வாழ்கை எப்படி மாறியுள்ளது?

அன்றைய நாட்களில், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் வயதான (old) அல்லது இறக்கும் பேட்டரியை (dead battery) மாற்றுவதற்கு ஒரு கடைக்குச் செல்ல வேண்டியதில்லை.

கூடுதல் பேட்டரியை ஆன்லைனில் ஆர்டர் (online order) செய்து அவர்களே மாற்றம் செய்துகொள்ளும் எளிய வழி இருந்தது.

ஆனால், இப்போது அப்படி இல்லை, ஒரு பேட்டரியை மாற்ற நீங்கள் சர்வீஸ் சென்டர் (smartphone service center) செல்ல வேண்டியதுள்ளது.

சில நேரங்களில் பேக் பேனல்களையும் (back panel) பேட்டரி உடன் சேர்த்து மற்ற வேண்டியதுள்ளது.

முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!

இது நன்மையையும் செய்யலாம்.! தீமையையும் செய்யலாம்.!

இது நன்மையையும் செய்யலாம்.! தீமையையும் செய்யலாம்.!

இதனால், கூடுதல் பணம் செலவாகிறது. இந்த போக்கை ஐரோப்பா மாற்றம் செய்ய துடிப்பது போல் தெரிகிறது.

ஐரோப்பாவின் நடவடிக்கை மூலம் அதிக நன்மை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அதிக தீமைகளைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்பதனால், இந்த சட்டத்தை அமல்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன என்பதைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Smartphones May Again Get Removable Batteries With Easy Replaceable To Hit Market

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X