பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கிருக்கிறது?

|

பல தசாப்தங்களாக வானியல் துறையானது நமது அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட மற்றும் கைக்கு எட்டாத விஷயங்களை அடையத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பறந்து விரிந்து கிடக்கும் இந்த விண்வெளியில் எங்கோ ஒரு மூலையில் நமது பூமி போன்ற வேறு ஒரு பூமி இருக்கிறதா? இல்லையா? என்று பல காலமாக விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் தடயங்களைத் தேடி வருகின்றன.

நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள புறக்கோள்கள் பற்றிய தரவுகளால் பல அவதானிப்புகள் நிறைந்துள்ளன. பறந்து விரிந்திருக்கும் இந்த ஆழமான விண்வெளியில் பூமி 2.0 இருப்பதற்கான சாத்தியங்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படும் நம்பிக்கையை உயர்த்தும் வகையில், ஒரு புதிய அமைப்பை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச வானியலாளர்கள் குழு ஒன்று, பூமியைப் போன்ற நிறைகளைக் கொண்ட இரண்டு கோள்களைக் கண்டறிந்துள்ளது.

பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கே!

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு கிரகங்களும் சிவப்புக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது நமது சூரியக் குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூமி போன்ற இந்த கிரகங்கள் நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெறும் 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைத்துள்ளது என்பதே சுவாரசியமாக இருக்கிறது.

மேலும் இரண்டு கிரகங்களும் அவற்றின் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் உள்ளன என்பது தான் கூடுதல் சிறப்பே. அதாவது, பூமி கிரகம் எப்படி அதன் நட்சத்திரமான சூரியனில் இருந்து சரியான தொலைவில் அமைத்து, உயிர்களை வாழ வைக்கக்கூடிய மண்டலத்தில் அமைந்துள்ளதோ - அதேபோல், இந்த கிரகங்களும் சரியான வாழ்வாதார மண்டலத்தில் அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் குஷியடைந்துள்ளனர்.

"பூமி போன்ற கிரகங்கள் மிகவும் பொதுவானவை என்பதை இயற்கை நமக்குக் காட்டுவதில் முனைப்பாகத் தெரிகிறது. இந்த இரண்டின் மூலம், சூரியனுக்கு மிக அருகில் உள்ள 7 கிரக அமைப்புகளை நாங்கள் இப்போது அறிவோம்" என்று ஆய்வின் முதல் ஆசிரியரான IAC ஆராய்ச்சியாளர் அலெஜான்ட்ரோ சுரேஸ் மஸ்கரேனோ விளக்குகிறார். இது தொடர்பான வானியல் மற்றும் வானியல் இயற்பியலில் கட்டுரை வெளியிடப்பட உள்ளது.

பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கே!

ESPRESSO மற்றும் CARMENES ஆகிய இரண்டு கருவிகளின் கூட்டமைப்பின் போது இந்த கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. GJ 1002 ஆனது 2017 மற்றும் 2019 க்கு இடையில் CARMENES மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2019 மற்றும் 2021-க்கு இடையில் ESPRESSO ஆல் அனுசரிக்கப்பட்டது. GJ 1002 கீழ் GJ 1002b மற்றும் GJ 1002c என்ற இரண்டு கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த இரண்டில் GJ 1002b கிரகமானது அதன் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை முடிக்க 10 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறது. அதே நேரத்தில் GJ 1002c கிரகமானது அதன் ஒரு சுற்றுப்பாதையை முடிக்க 21 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறது. நமது சூரியனுடன் இந்த அமைப்பு நெருக்கமாக இருப்பதைப் பற்றி வானியலாளர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்த இரண்டு கிரகங்களும், குறிப்பாக GJ 1002c, அவற்றின் பிரதிபலிப்பு ஒளி அல்லது வெப்ப உமிழ்வு ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் வளிமண்டலங்களின் தன்மை பூமி 2.0 ஐ தேட சிறந்த வேட்பாளராக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. GJ 1002 என்பது ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரம், சூரியனின் நிறை எட்டில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் நட்சத்திரமாகும்.

பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கே!

இது மிகவும் குளிர்ந்த, மங்கலான நட்சத்திரம் என்பது கவனிக்கத்தக்கது. இதன் பொருள் அதன் வாழ்விட மண்டலம் நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது என்று காகிதத்தின் இணை ஆசிரியரான வேரா மரா பயணி விளக்கியுள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரக அமைப்பு ஆகும். இது 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிராப்பிஸ்ட்-1 அமைப்பில் (Trappist-1 system) கண்டுபிடிக்கப்பட்ட பூமி போன்ற கிரகங்களின் மிகப்பெரிய தொகுதிக்கு நெருக்கமாக உள்ளது.

நாசா 2017 இல் TRAPPIST-1 என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் காணப்படும் பூமி அளவிலான கிரகங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. ஏழு பாறை உலகங்களைக் கொண்ட இந்த அமைப்பு அவற்றின் மேற்பரப்பில் தண்ணீருக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று நாசா அதேநேரத்தில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. மேற்பரப்பில் தண்ணீரைப் பார்ப்பது மிகவும் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது. நீர் ஆதாரம் இருந்தால், உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
International Team of Astronomers Found 2 Planets Like Earth Near To Our Solar System

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X