Home
Mobile

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட் அதிரும்படியான பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 3டி டிஸ்பிளே, 100W சார்ஜிங், 24ஜிபி ரேம், 4500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன், பிளிப்கார்ட் தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது, இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus).

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Infinix Note 40 Pro Plus Specifications): இந்த மாடலில் 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D curved AMOLED Display) மாடலாகும்.

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேம்.. 100W சார்ஜிங்!

அதுமட்டுமல்லாமல், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 10பிட் கலர் டெப்த் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் (Corning Gorilla Glass Protection) வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டிரிபிள் கேமரா சிஸ்டம் (Triple Camera System) வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

3எக்ஸ் சூப்பர்ஜூம் (3X Superzoom), 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல சூப்பர் நைட் (Super Night), போர்ட்ராய்டு (Portrait), டூயல் வீடியோ (Dual Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த நோட் 40 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் எக்ஸ் ஓஎஸ் (XOS 14) வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் மற்றும் பட்டையை கிளப்பும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் வருகிறது. அதுமட்டுமல்லாமல், கேமிங் ஃபிரேம் ரேட் கன்ட்ரோல் சப்போர்ட்டுக்காக எக்ஸ்பூஸ்ட் (XBOOST) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேம்.. 100W சார்ஜிங்!

இதுபோக ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. ஆகவே, வீடியோ மட்டுமல்லாமல், ஆடியோவும் மிரட்டலாக இருக்கும். இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், 20W வயர்லெஸ் மேக்சார்ஜ் (Wireless MagCharge) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த பேட்டரி உடன் ஸ்லிம் டிசைனில் 8.09 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. வின்டேஜ் கிரீன் (Vintage Green) மற்றும் டைட்டன் கோல்டு (Titan Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் வின்டேஜ் கிரீன் மாடலானது, வேகன் லெதர் பேனல் கொண்டிருக்கிறது. இந்த போனின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, 24 ஜிபி ரேம், 100W சார்ஜிங், 108எம்பி கேமரா கொண்ட இந்த போனை ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 Percent Discount on Infinix Note 40 Pro Plus With 12GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X