Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, குவாட் பிக்சல் கேமரா, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோ ஜி64 5ஜி அம்சங்கள் (Moto G64 5G Specifications): இந்த மோட்டோவில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் (Quad Pixel) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா போன்!

அதுமட்டுமல்லாமல், 1080p வீடியோ ரெக்கார்டிங், ஹைபர்லேப்ஸ் (Hyperlapse), ஸ்பாட் கலர் (Spot Color), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் அல்ட்ரா பிக்சல் (Ultra Pixel) சப்போர்ட் உள்ளது.

இந்த மோட்டோ ஜி64 5ஜி போனில் 30W டர்போசார்ஜிங் (Turbocharging) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி வருவதால், 192 கிராம் எடை மற்றும் 8.89 கிராம் எடை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவானது, 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 அப்டேட் உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா போன்!

அதோடு மை யுஎக்ஸ் (My UX) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட் மற்றும் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்டிருக்கும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 5 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. 8 ஜிபி மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது.

அதேபோல 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் IP52 ரெசிஸ்டன்ட், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

மின்ட் கிரீன் (Mint Green), பேர்ல் ப்ளூ (Pearl Blue), ஐஸ் லைலாக் (Ice Lilac) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி64 5ஜி போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.13,999 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி கொண்ட இந்த மாடலை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
16 Percent Discount on Moto G64 5G With 6000mAh in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X