முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!

|

இந்த பிரபஞ்சத்திலேயே (Universe) மிகவும் சக்தி வாய்ந்த பொருள் என்றால் நீங்கள் எதைக் கூறுவீர்கள்? பெரும்பாலானோர் கொஞ்சம் யோசித்து நமது சூரியனைச் சுட்டிக்காட்டுவீர்கள். சூரியன் (Sun) மாபெரும் சக்தியை தனக்குள் கொண்டுள்ளது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் சூரியனை விடப் பல கோடி மில்லியன் சக்தி வாய்ந்த ஒரு ஆபத்தான பொருள் இருக்கிறது.

அது தான் கருந்துளை (Black Hole) என்று அழைக்கப்படும் பிளாக்ஹோல்.! சூரியனை விடப் பல மடங்கு சக்தியை இந்த பிளாக்ஹோல்கள் கொண்டுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். சூரியனை விட சுமார் 10 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளையை நமது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறார்கள். கருந்துளைகளின் குணங்களைப் பற்றி அறிந்துகொள்ளப் பல ஆராய்ச்சிகள் இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை அழித்த வீடியோ!

கருந்துளைகள் நமது பிரபஞ்சத்தில் மிகவும் மர்மமான இடங்களில் ஒன்றாகும். புவியீர்ப்பு விசை மிகவும் வலுவாக உள்ள இடம் இது மட்டுமே. கருந்துளையில் இருந்து எதுவுமே தப்பிக்க முடியாது. ஏன் ஒளி கூட கருந்துளையின் புவியீர்ப்பில் இருந்து வெளியேற முடியாது என்பதே உண்மையாகும். நாசாவின் விஞ்ஞானிகள் சமீபத்தில் நமது கிரகத்தில் இருந்து சுமார் 250 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு பெரிய பிளாக்ஹோலை (Blackhole) கண்டனர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த ராட்சச கருந்துளையானது ஒரு பெரிய நட்சத்திரத்தை (star) முழுமையாக தனக்குள் உள்ளிழுத்து, கிழித்து உண்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். விண்வெளியில் (space) ஒரு பெரிய கருந்துளையால் ஒரு முழுமையான நட்சத்திரம் எப்படி அதன் இறுதி நேரத்தில் தடம் தெரியாமல் அழிந்தது என்பதை விஞ்ஞானிகள் பல தொலைநோக்கிகள் (Telescope) மூலம் பார்த்து ஆராய்ச்சி செய்தனர். ஒரு கருந்துளை அதன் சக்தியால் எப்படி நட்சத்திரங்களை அழித்தொழிக்கிறது என்பதைக் நேரடியாக கண்காணித்துள்ளனர்.

பிளாக்ஹோல் என்ற இந்த விண்வெளி அரக்கர்களில் ஒன்றில் பிடிபட்ட பொருளை எப்படி முழுவதுமாக உட்செலுத்தப்படுவதற்கு முன்பு என்ன நடக்கிறது என்ற அவதானிப்புகள் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "AT2021ehb" என அழைக்கப்படும் இந்த நிகழ்வு சூரியனைப் போலக் கிட்டத்தட்ட 10 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளையுடன் கூடிய ஒரு விண்மீன் மண்டலத்தில் (galaxy) நிகழ்ந்தது.

இந்த ஆய்வு ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசமான நிகழ்வின் போது கருந்துளைக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்தின் பக்கமானது நீண்டு, வெப்ப வாயுவின் நீளமான நதியாகக் குறைக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பலோமர் ஆய்வகத்தில் உள்ள Zwicky Transient Facility (ZTF), ஆரம்பத்தில் மார்ச் 1, 2021 அன்று இந்த நிகழ்வைக் கண்டறிந்தது.

NASA-வின் Neil Gehrels Swift Observatory மற்றும் Neutron Star Interior Composition Explorer (NICER) தொலைநோக்கி மூலம் முழு நிகழ்வையும் நாசா இடைவிடாமல் ஆய்வு செய்தது. இறுதியாக, இப்போது அந்த நட்சத்திரம் எப்படி ஒரு ராட்சச கருந்துளையால் முழுமையாக உண்ணப்பட்டது என்ற வீடியோவையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் கருந்துளையின் அழிக்கும் சக்தி எத்தகையது என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நல்ல வேலை இந்த பிளாக்ஹோல் நமது பால்வழி மண்டலத்திற்கு அருகில் இல்லை என்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

Best Mobiles in India

English summary
NASA Takes An Extraordinary Close Up Look Of a Black Hole Eating a Huge Star In Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X