Home
Mobile

பொசுக்குனு ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 2TB மெமரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒரு போனுக்கு 2 போன் வாங்கலாம் போலயே என்று சொல்லும்படியான பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 18W சார்ஜிங், 50எம்பி கேமரா, 2 டிபி மெமரி போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஹீலியோ சிப்செட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உடன் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதேபோல மேஜிக் ரிங் (Magic Ring) போன்ற பிரத்யேக அம்சங்களில் பின்னியெடுக்கிறது. இதன் முழு அம்சங்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்வோம்.

பொசுக்குனு ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் அம்சங்கள் (Infinix Smart 8 Plus Specifications): இந்த போனில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேஜிக் ரிங் பீச்சருடன் பஞ்ச்-ஹோல் ஸ்கிரீன் கொண்டுள்ளது.

இந்த மேஜிக் ரிங் பீச்சர் மூலம் பேஸ் அன்லாக், பேங்கிரவுண்ட் கால், சார்ஜிங் அனிமேஷன், சார்ஜிங் கம்பிளிஷன், லோவ் பேட்டரி ரீமைண்டர் போன்ற நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட ஐபோன்களில் டைனாமிக் ஐலேண்ட் பீச்சரை போலவே இந்த மேஜிக் ரிங் பீச்சர் அனுபவம் கொடுக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) உடன் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12என்எம் (Octa-Core MediaTek Helio G36 12nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

பொசுக்குனு ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கொண்ட டூயல் ஏஐ கேமரா (Dual AI Camera) வருகிறது. ரிங் ஃபிளாஷ் (Ring Flash) சப்போர்ட் வருகிறது. 1080P வீடியோ ரெக்கார்டிங் கொண்டிருக்கிறது.

சூப்பர் நைட் (SUPER NIGHT), போர்ட்ராய்டு (PORTRAIT) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ வருகிறது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனில் மிரளவிடும் அம்சமாக 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. ஆகவே, பேட்டரி பேக்கப் பட்டையை கிளப்பும்.

இந்த பேட்டரி உடன் 189 கிராம் எடை கொண்டிருக்கிறது. 8.5 மிமீ தடிமன் கொண்டுள்ளது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) சப்போர்ட் உள்ளது.

இந்த போன் கேலக்ஸி ஒயிட், சைனி கோல்டு மற்றும் டிம்பர் பிளாக் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலை ரூ.7,799ஆக இருக்கிறது. இப்போது, ரூ.780 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7000 மதிப்பிஸ் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் பிளிப்கார்ட் (Fipkart) தளத்தில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7019 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Infinix Smart 8 Plus With 6000mAh Battery in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X