Home
News

Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!

மிகவும் பிரபலமான டிடிஎச் (DTH) நிறுவனங்களில் ஒன்றான டிஷ் டிவி, தனது சேவையில் திடீர் மாற்றம் ஒன்றை செய்துள்ளது. ஒரு முக்கியமான நிபந்தனையுடன் டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் (Dish TV Smart Plus) என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

டிஷ் டிவி நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த புதிய ஸ்மார்ட் பிளஸ் சேவையானது, வாடிக்கையாளர்களின் மாதாந்திர டிஷ் டிவி ரீசார்ஜ் (Monthly Dish TV Recharge) வழியாகவே.. டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களுக்கான (TV Channels and OTT Contents) அணுகல் ஆகிய இரண்டையுமே வழங்கும்.

Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. இனி எல்லாமே Smart Plus தான்!

அதாவது சில ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ்களில், முக்கிய நன்மைகளோடு (டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்) சேர்த்து, கூடுதலாக கிடைக்கும் ஓடிடி நன்மைகளை போல, டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் சேவையின் கீழ் டிவி சேனல்களோடு சேர்த்து ஓடிடி நன்மையும் கிடைக்கும். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது.

அதென்ன நிபந்தனை? டிஷ் டிவியின் புதிய ஸ்மார்ட் பிளஸ் சேவையானது டிஷ் டிவி மற்றும் டி2எச் சேவையின் கீழ் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு மட்டுமின்றி புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் பேக்கின் மதிப்பானது ரூ.200 க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும்.

Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. இனி எல்லாமே Smart Plus தான்!

அப்படி இருந்தால் மட்டுமே அவர்களால் தேர்ந்தெடுகப்பட்ட டிவி சந்தா தொகுப்புடன் சேர்த்து ஓடிடி ஆப்களுக்கான அணுகலையும் பெற முடியும். ரூ.200 க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமான திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், டிஷ் டிவி நிறுவனத்தின் வாட்சோ பிளாட்ஃபார்மின் கீழ் ஓடிடி ஆப்களுக்கான பலன்களை பெற முடியும்.

டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் சேவையை பெற தகுதியான வாடிக்கையாளர்கள், எந்த ஸ்க்ரீனிலும் (டிவி, ஸ்மார்ட்போன்), எந்த நேரத்திலும் கன்டென்ட்களை பார்க்கலாம். அதாவது வாட்சோ - ஓடிடி சூப்பர் ஆப்ஸ் வழியாக கன்டென்ட்களை அணுகலாம் அல்லது செட்-டாப் பாக்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எஸ்டிபிக்கள் போன்ற ஸ்மார்ட் டிவைஸ்கள் வழியாகவும் கன்டென்ட்களை அணுகலாம்.

Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. இனி எல்லாமே Smart Plus தான்!

டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் சேவையை பெற தகுதியான சில வாடிக்கையாளர்களுக்கு "க்ளைம் நௌவ்" பட்டன் உடனாக "வாழ்த்துக்கள்! வாட்ச்சோ வழங்கும் டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் சேவைக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்" என்கிற ஆப் நோட்டிஃபிகேஷனும் கிடைத்துள்ளது. அது உங்களுக்கும் வந்து இருந்தால், அதை கிளிக் செய்வதன் வழியாக டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் சேவையை அணுகலாம்.

என்னென்ன ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்? "வழக்கமான" டிஷ்டிவி பேக் ஆனது தொகுக்கப்பட்ட டிவி சேனல்களுடன் வருகிறது. மறுகையில் உள்ள புதிய வாட்ச்டோ டிஷ்டிவி ஸ்மார்ட் பிளஸ் பேக் ஆனது 6 ஓடிடி ஆப்களுடன் வருகிறது. இதில் 5 ஆப்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும்; மீதமுள்ள 1 ஆப்பை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

பொதுவான 5 ஓடிடி ஆப்களை பொறுத்தவரை வாட்ச்சோ எக்ஸ் க்ளூஸிவ்ஸ் (Watcho exclusives), ஹங்காமா (Hungama), ஷார்ட்ஸ் டிவி (ShortsTV), ஃபேன்கோட் எஃப்சி (Fancode FC) மற்றும் சன்ஸ்கர் (Sanskar) போன்ற தளங்களுக்கான அணுகல்கள் அனைத்து டிஷ் டிவி ஸ்மார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.

தேர்வு செய்யக்கூடிய பட்டியலில் சௌபால் (Chaupal), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), இடிவி வின் (ETV Win), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ் கேட் பிளே (Lions Gate Play), ஷீமாரூ மீ (Shemaroo Me), சோனி லைவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ராஜ் டிஜிட்டல் (Raj Digital), ஸ்டேஜ் (Stage), தரங் பிளஸ் (Tarang Plus), நல்ல பிளிக்ஸ் (Namma Flix) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) உள்ளிட்ட ஆப்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
New Change in Dish TV DTH Service Customers Can Avail Smart Plus Benefits With Monthly Recharge pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X