BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
இந்தியாவின் டெலிகாம் துறையில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், இன்னும் மலிவு விலையில் மக்களுக்கு சேவை செய்து வரும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சில நேரங்களில் டாப்பில் வேலை செய்கிறது.
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) இந்தியாவில் பல குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL Prepaid Plans) மக்களுக்காக வழங்கி வருகிறது. இதில் குறிப்பிட்ட சில பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் (BSNL recharge plans) மட்டும் குறைந்த பட்ஜெட் விலையில் அதிக நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 197 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 197 Prepaid Plan):
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (VI) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் BSNL குறைந்த பட்ஜெட்டில் அதிக செல்லுபடியை வழங்குகிறது. அப்படி மிகவும் மலிவு விலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ஒரு சூப்பர் ஹிட் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டம் (BSNL Rs 197 Plan). இந்த திட்டத்தின் சிறப்பு மற்றும் இதன் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
வெறும் ரூ. 197 விலையில் 2 மாதம் + கூடுதலாக 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், இதன் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா நன்மை (2GB daily data benefits) கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை (unlimited voice calls) போன்றவையும் கிடைக்கிறது. இத்துடன் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது.
முன்பே சொன்னது போல, இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் மொத்தம் 70 நாட்களாகும். இந்த விலையில் இத்தனை நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்கும் ஒரே திட்டம் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதல் இலவச நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு ஜிங் (ZING) நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 197 பிளான் உடன் கிடைக்கும் 70 நாள் வேலிடிட்டி:
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில் உள்ள அனைத்து இலவச பலன்களும் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 70 நாட்கள் என்றாலும் கூட, இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகள் மட்டும் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
பிஎஸ்என்எல் இன் ரூ 197 ப்ரீபெய்ட் திட்டம் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மையை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உங்களிடம் இரண்டாம் சிம் கார்டாக பிஎஸ்என்எல் சிம் இருக்கிறது என்றால், நீங்கள் கட்டாயம் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இது மிகவும் சிறந்த பட்ஜெட் பிரெண்ட்லி திட்டமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








