இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டி தூக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 12ஜிபி ரேம், 1டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா பிரீமியம் லுக்கில் ரியல்மி சி65 5ஜி (Realme C65 5G) போன் வெளியாக இருக்கிறது.
ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (Realme C65 5G Specifications): இந்த ரியல்மியில் 6.67 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ரூ.10000 பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. இதுவொரு மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட 5ஜி சிப்செட் மாடலாகும். மாலி கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்ட வாய்ப்புள்ளது. இருப்பினும், மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் மட்டுமே இருக்கும்.
இந்த ரியல்மி சி65 5ஜி போனில் 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இந்த 6 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது.
அதேபோல 2 வேரியண்ட்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மியில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது.

8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த போன் பட்ஜெட் மாடல் என்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வருகிறது. இருப்பினும், பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியமாக IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டிருக்கிறது.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரி உடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் (Ultra Slim Design) 7.89 தடிமன் மற்றும் 190 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. இந்த ரியல்மி சி65 5ஜி போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.
இந்த போன் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த போனின் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இப்போது, விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9999 பட்ஜெட்டில் இந்த போன் வெளியாக இருக்கிறது.
மேற்கூறிய அம்சங்களில் சிப்செட், டிஸ்பிளே மற்றும் ரெசிஸ்டன்ட் ஆகியவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அம்சங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இருப்பினும், இதே அம்சங்களுடன் அந்த போன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ரூ.10000 பட்ஜெட்டுக்குள் நல்ல சிப்செட் கொண்ட போன் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications