இந்திய வானில் தோன்றிய மர்ம பொருள் ஏலியன் விண்கலமா? 3 நிமிடம் வெறித்து பார்த்த மக்கள்.!

|

பூமியில் (Earth) உயிர்வாழும் மனிதக்குலத்தில் இருக்கும் சுமார் 65 சதவீதத்திற்கும் மேலான மனிதர்கள், ஏலியன் (Alien) என்ற வேற்று கிரக வாசிகள் இருப்பதாக நம்புகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் (Unidentified flying object) அல்லது விசித்திரமான உருவத்தைப் (Mysterious figure) பார்த்தால் மக்கள் இப்போது உடனே ஏலியன் உடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

மனிதக்குலத்தின் மிகப்பெரிய ஆர்வங்களில் ஒன்று ஏலியன்கள் என்றே நாம் கூறலாம். விண்வெளியின் ஆழத்தில் (Deep space) வேற்று கிரக வாழ்க்கை (Extraterrestrial life) இருக்கிறதா? இல்லையா? என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஏலியன் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவுமே நம்மிடம் இல்லை என்றாலும், அமெரிக்கா போன்ற நாடுகள் பல பறக்கும் மர்மப் பொருட்களைத் (Flying mysterious objects) தனது ரேடாரில் பார்த்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்திய வானில் தோன்றிய மர்ம பொருள் ஏலியன் விண்கலமா? 3 நிமிடம் திக்திக்!

மர்மமான பறக்கும் பொருட்களை நாம் UFO என்று குறிப்பிடுகிறோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் UFO நிகழ்வுகளை அவ்வப்போது மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது இந்தியாவிலும் நடந்தேறியுள்ளது. இந்திய வானத்தில் தோன்றிய ஒரு அசாதாரண அடையாளத்தை வைத்து மக்கள் எதோ ஏலியன் நிகழ்வை நேரில் கண்டது போல இணையத்தை (Internet) விசித்திரமான பதிவுகளால் நிரப்பி வருகிறார்கள்.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் நிகழ்வு கொல்கத்தா (Kolkata) வானத்தில் வியாழக்கிழமை தோன்றியதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தா வானில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அதிக வெளிச்சத்துடன் சுமார் மூன்று நிமிடங்களுக்கு ஒளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு இந்தியாவிற்குள் UFO போன்ற வதந்திகளை மக்கள் மத்தியில் தீயாய் கிளப்பியுள்ளது. பிஷ்ணுபூர், கிர்னாஹர், கட்டல் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் மாலை 5.47 மணியளவில் இந்த ஒளி தெரிந்துள்ளது.

டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, இந்த நிகழ்வு வானத்தைப் பார்த்த மக்களை வேற்றுகிரகக் ஸ்பேஸ்ஷிப் (Alien spaceship) தோன்றியதை பார்ப்பதாக ஊகிக்க வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. "இது ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளா (UFO)?" என்று பலர் இணையத்தில் கேள்வி எழுப்பிய போது, சிலர் பீதியடைந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளிச்சம் படிப்படியாக மறைந்தது என்று கூறப்படுகிறது. சிலர் இந்த ஒளியை வானத்தின் கிழக்குப் பகுதிகளில் கண்டதாக கூறுகிறார்கள். இன்னும் சிலர் மாறாக, வானத்தின் வடக்குப் பகுதிகளில் ஒளி காணப்படுவதாக கூறியுள்ளனர்.

கொல்கத்தா வானில் தோன்றிய மர்ம ஒளி கொண்ட பொருள் ஏலியன் ஸ்பேஸ்ஷிப்போ அல்லது UFO வருகையோ கிடையாது என்பது இறுதியில் உறுதிப்படுத்தப்பட்டது. கொல்கத்தா வானில் 3 நிமிடங்களுக்குத் தோன்றிய அந்த ஒளியானது அக்னி-வி ஏவுதல் மூலம் உருவான வெளிச்சம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM), அக்னி-வி (Agni-V missile) இன் சமீபத்திய இரவு சோதனைகளின் விளைவாக வானத்தில் இந்த வெளிச்சம் ஏற்பட்டது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-வி ஏவுகணையின் இரவு நேரச் சோதனைகளை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை 5000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளை அடையக்கூடியது மற்றும் இந்தியாவின் தற்காப்பு திறன்களுக்கு முக்கியமானது. ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் (APJ Abdul Kalam Island) இருந்து மாலை 5.30 மணிக்கு இது ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வானத்தில் ஒரு மர்ம ஒளியைப் பார்த்ததும் மக்கள் ஏன் ஏலியன் உடன் தொடர்புப்படுத்திக் கொண்டது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை, இந்திய மக்களுக்கும் ஏலியன்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை அதிகமாக கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது. ஏலியன் இருக்கிறதா இல்லையா? ஒரு மர்ம பொருளை வானில் பார்த்தால் அதை நீங்கள் என்னவென்று நினைப்பீர்கள் என்று உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Mysterious Light Appeared In Kolkata Sky For Three Minutes Is Not an UFO It Is Agni-V Missile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X