ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்த வருடம் அறிமுகம் செய்யவிருக்கும் அதன் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) சாதனம் குறித்த முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதுபற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) மற்றும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) என்ற இரண்டு சாதனங்களை இரண்டு விலை பிரிவின் கீழ் அறிமுகம் செய்தது. இதில் ஒன்பிளஸ் 12R பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளிவந்து, விற்பனையில் சக்கைபோடு போட்டது.

பிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 13 (Flagship Killer Smartphone OnePlus 13):
அதேபோல், நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இதுவும் அதிக வரவேற்பை பெற்று, கடந்த ஆண்டின் பெஸ்ட் பிளாக்ஷிப் போனாக விற்பனையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்புடன், நிறுவனம் இப்போது அதன் அடுத்த தலைமுறை போனை வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் அக்டோபர் 2024 இல் அதன் அடுத்த பிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் வரிசையிலும், நிறுவனம் 2 மாடலக்ளை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) மற்றும் ஒன்பிளஸ் 13 என்ற பெயருடன் வெளிவரலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13R பற்றிய விபரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், நமக்கு ஒன்பிளஸ் 13 பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான லீக் தகவலின் படி, வெள்ளை நிறத்தில் கம்பிரமாக ஒரு சிங்கம் போல ஜொலிக்கும் ஒன்பிளஸ் 13 சாதனத்தின் புகைப்படங்களை நம்மால் பார்க்கமுடிகிறது. புதிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சாதனமானது என்ன சிப்செட்டை பெரும் என்பது பற்றிய விபரங்கள் லீக் ஆகியுள்ளன.

ஒன்பிளஸ் 13 போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
இந்த புதிய ஸ்மார்ட்போனில் நிறுவனம் என்ன அளவு டிஸ்பிளேவை வழங்கும் என்ற தகவல் லீக் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒன்பிளஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகுறச் செய்துள்ளது. ஒன்பிளஸ் 13 சத்தான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Snapdragon 8 Gen 4 SoC) சிப்செட் உடன் வெளிவரும் என்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட்டை பெரும் முதல் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 13 இருக்கலாம்.
இந்த OnePlus 13 டிவைஸ் 6.8" இன்ச் அளவு கொண்ட OLED LTPO டிஸ்பிளேவை (display) பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே மைக்ரோ கர்வுடு டிசைன் (micro-curved design) உடன் 2K ரெசொலூஷனை (2K resolution) வழங்கும் என்றும் லீக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (ultrasonic in-screen fingerprint scanner) அம்சத்தை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஒன்பிளஸ் போனில் அண்டர் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (under-display fingerprint sensors) வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஒன்பிளஸ் 13 சாதனம் மல்டி-ஃபோக்கல் கேமரா அமைப்பை கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். இதில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஒன்பிளஸ் 13 சாதனம் புதிய ரியர் டிசைன் வடிவமைப்பை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








