Home
Mobile

தலைவன் வேற மாறி.. ரூ.23010 போதும்.. SAMSUNG லெதர் பேனல்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 2TB மெமரி.. எந்த போன்?

சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக வேகன் லெதர் பேக் பேனல் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 2டிபி மெமரி, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி சி55 (Samsung Galaxy C55) போன் வெளியாகி இருக்கிறது.

வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், கோல்டன் மெட்டாலிக் ஃபிரேம் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) மற்றும் பாடி வருவதால், அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி சி55 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்ப்போம்.

தலைவன் வேற மாறி.. ரூ.23010 போதும்.. லெதர் பேனல்.. OIS கேமரா மாடல்!

சாம்சங் கேலக்ஸி சி55 அம்சங்கள் (Samsung Galaxy C55 Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Plus Infinity-O Display) பேனல் கொண்ட மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. லேட்டஸ்ட் சாம்சங் போன்களில் வரும் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) கொண்டிருக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி சி55 போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) மொபைல் சிப்செட் மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

தலைவன் வேற மாறி.. ரூ.23010 போதும்.. லெதர் பேனல்.. OIS கேமரா மாடல்!

இந்த போனில் 2 ரேம் வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (micro SD Card Slot) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உடன் வருகிறது.

8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஆட்டோபோகஸ் (Auto Focus), 4K வீடியோ ஷூட்டிங் (4K Video Recording) சப்போர்ட் வருகிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி சி55 போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. வேகன் லெதர் பினிஷ் (Vegan Leather Finish) கொண்ட ஆரஞ்ச் (Orange) மற்றும் பிளாக் (Black) கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,010ஆக இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,460ஆக இருக்கிறது. இந்த போன் சீனாவில் அறிமுகமாகிவிட்டது. இந்த வாரத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதே பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்55 போன் ஏற்கனவே, இந்தியாவில் வெளியாகிவிட்டது. ஆனால், லெதர் பினிஷிங் வரவில்லை. ஆகவே, இந்த போன் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy C55 With 12GB RAM, 50MP Camera Sale Under RS 25000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X