ஆடிப்போன Apple சாம்ராஜ்ஜியம்.! iPhone தயாரிப்பை நிறுத்த முடிவு.! காரணம் என்ன?

|

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகளவில் மவுசு ஜாஸ்தியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்கள் (iPhone) மீது தான் மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் சாதனங்களால் தான் உலக பேமஸ் ஆனது என்று சொன்னால், யாரும் மறுத்துப் பேச மாட்டார்கள்.

அப்படி, ஆப்பிளிற்குப் பல வழிகளில் வருவாயை ஈட்டி கொடுத்த ஐபோன் தயாரிப்பை நிறுவனம் இன்னும் பல மேம்படுத்தல்களுடன் ஆண்டு தோறும் தவறாமல் ஒரு புதிய சீரிஸை அறிமுகம் செய்து வருகின்றது. இருப்பினும், சில ஐபோன்களால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அப்படியான ஒரு மாடல் தான் Apple iPhone SE சீரிஸ் பிரிவு. மக்களுக்கான குறைந்த விலையில் டீசெண்டான அம்சங்களுடன் வெளியிடப்படச் சிறப்பு மாடல் தான் இந்த Apple iPhone SE சீரிஸ்.

ஆடிப்போன Apple சாம்ராஜ்ஜியம்.! iPhone தயாரிப்பை நிறுத்த முடிவு.!

மிங்-சி குவோவின் சமீபத்திய அறிக்கையின்படி, எதிர்பார்த்ததை விடக் குறைவான தேவை காரணமாக, ஆப்பிள் அடுத்த Apple iPhone SE 4 ஸ்மார்ட்போனை ரத்து செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஒரு வேலை இந்த Apple iPhone SE 4 மாடலை ரத்து செய்யாவிட்டால், வரும் 2024 வரை இந்த கேஜெட்டின் வணிக உற்பத்தியைத் தாமதப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் ஐபோன்களில் இருக்கும் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் பதிப்புகள் தான் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் விரும்பப்பட்ட மாடல்களாக உள்ளன.

இருப்பினும் நிறுவனம் பலமுறை நடுத்தர மற்றும் குறைந்த விலை மாடல்களை பட்ஜெட் பயனர்களுக்காக வெளியிட்டுப் பரிசோதித்து வருகிறது. சில நேரங்களில் இது வெற்றியைத் தருவது போலத் தோன்றினாலும், உண்மையில் இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி தரவில்லை என்பதே ஆப்பிள் நிறுவனத்தின் கவலையாக இருக்கிறது. முழு டிஸ்பிளே வடிவமைப்பில் ஏற்படும் அதிக பொருள் செலவுகள் காரணமாக இந்த Apple iPhone SE 4 சாதனம் ரத்துசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது புதிய தயாரிப்புகளை உருவாக்குவதோடு தொடர்புடைய செலவைக் குறைப்பதில் வணிகத்திற்கு உதவும், குறிப்பாக உலகளாவிய மந்தநிலை அடிவானத்தில் இருக்கும் நேரத்தில் மற்றும் ஆப்பிள் சேமிக்கும் எதையும் பிராண்டிற்குப் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. விற்பனையின் அடிப்படையில் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை வெறும் iPhone SE மாடல்கள் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாடலை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் ஐபோன் 13 மினி, ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றின் சந்தை தேவை நம்பமுடியாத அளவிற்குக் குறைவாக இருந்தது. அதிகரித்த தேவை காரணமாக, குபெர்டினோ-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமானது 14 பிளஸ் மாடலின் உற்பத்தியைக் குறைக்கும் அதே வேளையில் ப்ரோ மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது என்பதே உண்மையாக இருக்கிறது.

இறுதியில், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் வரிசையில் உள்ள ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான தேவை உலகளவில் அதிகமாக இருப்பதனால், நிறுவனம் ஐபோன் எஸ்இ 4 டிவைஸை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாடலை நிறுவனம் ஒத்திவைக்கிறதா அல்லது ரத்து செய்கிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டில் எதோ ஒன்று கட்டாயம் நடக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Unexpected Tim Cook Decision To Stop Or Delay Apple iPhone SE 4 Smartphone Manufacturing Until 2024

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X