Home
Mobile

மார்கெட் மிரளுது.. ரூ.18,800 போதும்.. 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

விவோ பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமான பட்ஜெட்டில் 120Hz டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் விவோ ஒய்200ஐ 5ஜி (Vivo Y200i 5G) போன் வெளியாகி இருக்கிறது.

விவோ ஒய்200ஐ அம்சங்கள் (Vivo Y200i Specifications): இந்த விவோவில் 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே பேனல் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் வருகிறது.

மார்கெட் மிரளுது.. ரூ.18800 போதும்.. 6000mAh பேட்டரி.. 16GB ரேம் போன்!

டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி, 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதேபோல 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் வருகிறது. ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm Mobile) சிப்செட் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் வருவதால், பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். இந்த விவோ ஒய்200ஐ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera Sytem) வருகிறது.

மார்கெட் மிரளுது.. ரூ.18800 போதும்.. 6000mAh பேட்டரி.. 16GB ரேம் போன்!

இந்த கேமராவில் ஏஃஎப் போகஸ் (AF Focus), 1080P வீடியோ ரெக்கார்டிங், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom) சப்போர்ட் வருகிறது. அதேபோல நைட் சீன் (Night Scene), போர்ட்ராய்டு (Portrait), மைக்ரோ மூவி (Micro Movie) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

2எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (2x Digital Zoom) கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த விவோ ஒய்200ஐ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. ஓடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் (OTG Reverse Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த விவோ ஒய்200ஐ போனில் IP64 தர டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூ (Blue), கிளாசியர் ஒயிட் (Glacier White), மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,800ஆக இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,155ஆகவும், 12 ஜிபி ரேம் +512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,505ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் 27ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y200i With 12GB RAM, 6000mAh Battery Sale From April 27 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X