Home
News

இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்

தற்போது அனைத்து முக்கியமான வேலைகளுக்கும் மொபைல் போன் தான் அதிகம் பயன்படுகிறது. ஆனாலும் சில சமயங்களில் இந்த போன் உபயோகம் செய்யும் போது இன்டர்நெட் மிகவும் மெதுவாக இருப்பது நமக்குப் பெரிய தலைவலி கொடுக்கும்

எனவே அப்படியான சூழ்நிலையில் நமக்குத் தேவையான கோப்புகள் அல்லது நமக்குப் பிடித்ததை டவுன்லோட் செய்யவே முடியாது. அதேபோல் இன்டர்நெட் மெதுவாக இருந்தால் நமக்குப் பிடித்த கேம்களை கூட விளையாட முடியாது என்பது தான் உண்மை. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இப்போது மொபைலில் இன்டர்நெட் வேகத்தை (Internet Speed) அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மொபைல் Settings-ல இதை பண்ணா.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்!

கேச் கிளியர் : முதலில் உங்களது போனில் கேச் கிளியர் செய்ய வேண்டும். இந்த Clear Cache மூலம் மெதுவாக இருக்கும் மொபைல் இன்டர்நெட் வேகத்தைச் சரிசெய்ய உதவும். ஒருவேளை நீண்ட காலமாக உங்களது மொபைல் போனில் கேச் கிளியர் செய்யவில்லை என்றால் நிச்சயமாக அதை அழித்துப் பாருங்கள். இது உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கும்.

செயலிகள்: உஙகளது ஸ்மார்ட்போனில் பின்னணியில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை கொண்டிருக்கலாம். எனவே பல ஆப்ஸ்கள் (செயலிகள்) பின்னணியில் இயங்கிக்கொண்டிருப்பது மொபைல் இன்டர்நெட் வேகத்தைப் பாதிக்கும். மேலும் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை க்ளோல் செய்யலாம் அல்லது நிரந்தரமாக அழித்துவிடலாம்.

மொபைல் Settings-ல இதை பண்ணா.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்!

ஆட்டோ அப்டேட்: அதேபோல் உங்களது போனில் அப்ளிகேஷன்களை ஆட்டோ அப்டேட் செய்யும் ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்கலாம். மேலும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களை (செயலிகளை) அவ்வப்போது நாமே பார்த்து அப்டேட் செய்துகொள்ளலாம். ஏனெனில் ஆட்டோ அப்டேட் செய்வதற்காக மொபைல் டேட்டா செலவாகும்போது இன்டர்நெட் வேகம் குறையும்.

Airplane mode: அதேபோல் போனில் உங்களுக்குப் பிடித்த படங்களை டவுன்லோட் செய்யும்போது சில சமயம் எம்பி கணக்கில் டவுன்லோட் ஆகாமல் கேபி கணக்கில் டவுன்லோட் ஆகும். அப்படியான நேரத்தில் நீங்கள் உங்களுடைய மொபைல்போனை Airplane mode ஆன் செய்துவிட்டுத் திரும்ப ஆப் செய்தால் 20 நொடிகள் வரை நீங்கள் டவுன் லோடு செய்வது வேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இப்படி செய்தால் 20 நொடிகள் மட்டும் தான் அந்த வேகத்தில் இருக்கும். திரும்பவும் அதே வேகத்தில் இருக்க வேண்டும் என்றால் Airplane mode ஆன் செய்துவிட்டுத் திரும்ப ஆப் செய்யுங்கள்.

மொபைல் Settings-ல இதை பண்ணா.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்!

சிக்னல்: அதேபோல் வீட்டில் ஒரு அறை அல்லது எதாவது மூலையில் அதிக இன்டர்நெட் வேகம் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், அங்கு மொபைலில் இன்டர்நெட் கனெக்ட் செய்ய வேண்டாம். அதாவது வீட்டில் சிக்னல் எங்கு சரியாகக் கிடைக்கிறதோ அங்கே இன்டர்நெட் கனெக்ட் செய்து பயன்படுத்தவும்.

ரீசெட் செய்து பார்க்கலாம் (Reset your network settings): அதேபோல் நெட்வொர்க் செட்டிங் இயல்பாக தானாகவே இயங்கக்கூடியதாக இருக்கும். இது அடிக்கடி சிக்கல்களை உருவாக்கி இணைய வேகத்தை மெதுவாக்கலாம். எனவே இதை சரி செய்ய உங்களது போனில் நெட்வொர்க் செட்டிங்ஸை ரீசெட் செய்து பார்க்கலாம். அதாவது Settings > System > Advanced > Reset options > Reset Wi-Fi, mobile & Bluetooth மூலம் ரீசெட் செய்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Increase Internet Speed ​​on Your Android Phone: Here Are Simple Tips
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X