Home
News

ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!

ரூ.60,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன், தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வெறும் ரூ.20,000-க்குள் வாங்க கிடைக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 11-ஐ ரூ.19,149 க்கு வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:

அமேசான் இந்தியா வழியாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் மீது மொத்தம் 3 ஆஃபர்கள் அணுக கிடைக்கிறது. முதல் ஆஃபர் - அமேசானின் டைரக்ட் டிஸ்கவுண்ட். இதன்கீழ் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் மீது நேரடியாக 12& தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.56,999-லிருந்து ரூ.49,999 ஆக குறையும்.

ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon!

இரண்டாவது ஆஃபர் - எச்டிஎஃப்சி வங்கியின் பிளாட் டிஸ்கவுண்ட். இதன் கீழ் எச்டிஎஃப்சி பேங்க்கின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ.3,250 பிளாட் தள்ளுபடியை பெறுவார்கள். இதன் மூலம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-லிருந்து ரூ.46,749 ஆக குறையும்.

மூன்றாவது ஆஃபர் - அமேசானின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர். இதன் கீழ் நல்ல நிலையில் உள்ள உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.27,600 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதையும், மேற்கண்ட 2 ஆஃபர்களையும் சேர்த்தால்.. ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.19,149 க்கு கொண்டுவர முடியும்.

ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon!

ஒன்பிளஸ் 11-ன் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் QHD+ E4 2.75D கர்வ்டு OLED LTPO 3.0 டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி வரை ரேம், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ், 50எம்பி + 48எம்பி+ 32எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) வாங்க கிடைக்கும் சூழ்நிலையில் ஒன்பிளஸ் 11-ஐ வாங்கலாமா? லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 12 மாடலானது பிளிப்கார்ட் வழியாக ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கும் நேரத்தில்.. ஒரு வருட பழைய மாடலான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை இப்போது நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் அல்லது குழப்பம் உங்களுக்கு இருப்பின்.. இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 பவர்ஃபுல் காரணங்கள் இதோ:

ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon!

1. பக்காவான கேமரா செட்டப்: ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் ஹசல்பிளாட்-ஆல் இயங்கும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன: சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 48எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 32எம்பி ஆர்ஜிபிடபுள்யூ டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

2. போட்டுத்தாக்கும் பெர்ஃபார்மென்ஸ்: இது குவால்காமின் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட்களில் ஒன்றான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் உள்ளது. இது 35% வேகமான சிபியு, 25% மேம்படுத்தப்பட்ட ஜிபியு-வை வழங்குகிறது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது எந்த குறையும் இருக்காது.

3. உண்மையாகவே சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்: ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 25 நிமிடங்களில் ஸ்மார்ட்போனின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100% ஆக சார்ஜ் செய்துவிடும்.

4. அலெர்ட் ஸ்லைடர்: ஒன்பிளஸ் 11 வழியாக இந்நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தை மீண்டும் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும் கூட இந்த அம்சம் ஒன்பிளஸ் 11-க்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

5. பல ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்ஸ்: ஆண்ட்ராய்டு 13 (Android 13 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 13.0 உடன் வரும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How to Buy OnePlus 11 5G Smartphone For Just Rs 19149 Instead of Rs 56999 in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X