போனுக்காக AC விற்கும் iQOO.. சைஸ் குட்டி ஆனா ரொம்ப பவர்.. போன் கிட்ட போனாலே ஒட்டிக்கும் புது டிவைஸ்..
ஸ்மார்ட்போன்கள் இப்போது மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்களாகிவிட்டன. இதனால் அடிக்கடி சூடாகின்றன. கேமிங் மற்றும் வீடியோ காலிங் போன்ற நேரங்களில் கூடுதலாக ஓவர் ஹீட்டிங் சிக்கலை சந்திக்கின்றன. இந்த சிக்கலை சரி செய்ய, ஐகியூஓஓ (iQOO) புதிய டிவைஸை அறிமுகம் செய்யவுள்ளது.
ஆம் மக்களே, விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான ஐகியூஓஓ பிராண்ட் இப்போது ஸ்மார்ட்போன்கள் சூடாவதை (smartphone heating) குறைக்க உதவும் கூலிங் ஃபேன் (cooling fan) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. ஆம், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு ஏசி (AC) போல செயல்படும் புதிய கூலிங் ஃபேன் சாதனத்தை நிறுவனம் ஐகியூஓஓ மேக்னெட்டிக் கூலிங் பேக் கிளிப் (iQOO Magnetic Cooling Back Clip) என்ற பெயருடன் வெளியிடவுள்ளது.

ஐகியூஓஓ மேக்னெட்டிக் கூலிங் பேக் கிளிப் (iQOO Magnetic Cooling Back Clip):
இந்த புதிய ஐகியூஓஓ மேக்னெட்டிக் கூலிங் பேக் கிளிப் சாதனம் வரும் ஏப்ரல் 24, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூலிங் ஃபேன் சாதனம் குறித்த முழு சிறப்பம்ச விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இதன் முக்கிய சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் நம்மிடம் உள்ளது. இந்த ஐகியூஓஓ மேக்னெட்டிக் கூலிங் பேக் கிளிப் கூலிங் ஃபேன் சாதனம் 19mm அளவு மெலிதாக வெளிவரும்.
இதன் எடை வெறும் 69 கிராம் மட்டுமே இருக்கும் என்று iQOO அதன் போஸ்டர் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஃபேன் மற்றும் கூலிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய கூலிங் ஃபேன் சாதனத்தை iQOO பிராண்ட் அறிமுகம் செய்வது ஒன்றும் இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நிறுவனம் 2 கூலிங் ஃபேன் சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான ஐகியூஓஓ பிராண்ட் கூலர் பேக் கிளிப் 2 (Cooler Back Clip 2) மற்றும் கூலர் பேக் கிளிப் 2 ப்ரோ (Cooler Back Clip 2 Pro) என்ற இரண்டு கூலிங் ஃபேன் சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாண்டர்ட் மாடல் கிளிப் 2 மாடல் TEC கூலிங் சீட் அம்சத்துடன் வெளிவந்தது.

எந்த போன்களுடன் இந்த கூலிங் பேன் சிறப்பாக செயல்படும்?
இது ஸ்மார்ட்போனின் சூட்டை 30 டிகிரி வரை குறைக்கும் தன்மையோடு வெளிவந்தது. இதற்கு அடுத்தபடியாக, நிறுவனம் வெளியிட்ட கூலர் பேக் கிளிப் 2 ப்ரோ சாதனம் பெரிய கூலிங் சிப் உடன் (cooling chip), காப்பர் பிளேட் (Copper plate), RGB லைட்டிங் உடன் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை சுமார் 35 டிகிரி வரை குறைக்கும் சூப்பர் கூலிங் தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது.
இந்த கூலிங் ஃபேன்கள் அனைத்தும் சார்ஜ்ஜிங் உடன் கூலிங் செய்யும் திறனை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இப்போது வெளியாகவுள்ள புதிய கூலிங் ஃபேன் சாதனமும் ஸ்மார்ட்போன், டேப்லெட் (Tablet) போன்ற சாதனங்களின் வெப்பத்தை வேகமாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இவை மேக்னெட்டிக் (Magnetic) அம்சத்துடன் வருவது கவனிக்கத்தக்கது.
இவை கூலிங் ஃபேன் உடன் மேக்னெட் ஆற்றலை கொண்டிருப்பதனால், சாதனங்களில் இது உடனே ஒட்டிக்கொள்கின்றன. இதை ஆப்பிள் (Apple), சியோமி (Xiaomi), ஹுவாவேய் (Huawei), பிளாக் ஷார்க் (Black Shark), ரெட் மேஜிக் (Red Magic), மற்றும் நுபியா (Nubia) போன்ற ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம். பழைய கூலிங் ஃபேன் சாதனங்கள் போல, கிளிப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வரும் ஏப்ரல் 24ம் தேதி, iQOO நிறுவனம் ஐகியூஓஓ இஜட்9 (iQOO Z9), ஐகியூஓஓ இஜட்9x (iQOO Z9x), மற்றும் ஐகியூஓஓ இஜட்9 டர்போ (iQOO Z9 Turbo) ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் நிறுவனம் இந்த கூலிங் ஃபேன் சாதனத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications