Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.20000 பட்ஜெட்ல OnePlus நோர்ட்.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போனானது, இதுவரையில் கிடைக்காத தள்ளுபடியில் வந்துள்ளது.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆக இருந்தது. ஆனால், இப்போது விலை குறைப்பு, டிஸ்கவுண்ட் ஆகியவற்றுடன் ரூ.20000 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது. கேமரா, பேட்டரி மற்றும் சிப்டெட் அம்சங்களில் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த போனின் முழு விவரம் இதோ.

பொளக்குது விற்பனை.. ரூ.20000 பட்ஜெட்ல OnePlus நோர்ட்.. SONY கேமரா!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 5G Specification): இந்த போனில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த டிரிபிள் ரியர் சிஸ்டமானது (Triple Rear System) ஓஐஎஸ் (OIS) மற்றும் டர்போராவ் (TurboRAW) டெக்னாலஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது. 20x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அல்ட்ரா ஸ்டெடி மோட் (Ultra Steady Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video) பீச்சர்கள் வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், எச்டிஆர் (HDR), நைட்ஸ்கேப் (Nightscape), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), வீடியோ போர்ட்ராய்டு (Video Portrait) போன்ற பீச்சர்களும் இருக்கின்றன. ஈஐஎஸ் (EIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்டெடி மோட் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஃபிக்ஸ்ட் போகஸ் (Fixed Focus) கொண்டிருக்கிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.20000 பட்ஜெட்ல OnePlus நோர்ட்.. SONY கேமரா!

ஆகவே, கேமரா பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போன் இருக்கும். 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது.

அதேபோல 240Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவிலும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதன் கேமரா மற்றும் டிஸ்பிளேவை போலவே பட்டையை கிளப்பும் பேட்டரி சிஸ்டமும் வருகிறது.

வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளும்படியான

80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ஒன்பிளஸ் மாடலில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 782G 6nm Mobile) சிப்செட் வருகிறது.

கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. அக்வா சர்ஜ் (Aqua Surge) மற்றும் கிரே சிம்மெர் (Grey Shimmer) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த நோர்ட் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,990ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.2000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.20,990 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on OnePlus Nord CE 3 5G With Sony Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X