வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்கும் விதமாக 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்ட ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) போனின் விற்பனை தாறுமாறாக இருக்கிறது.
பிரீமியம் லுக் கொடுக்கும் பீனிக்ஸ் டிசைன் (Phoenix Design), 188 கிராம் எடை, 7.97 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி (Slim Body) போன்றவற்றில் ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித்தூக்குகிறது. இந்த ரியல்மி போனின் அம்சங்கள், விலை, விற்பனை மற்றும் தள்ளுபடி விவரங்கள் இதோ.

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): இந்த ரியல்மியில் 6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் வருகிறது.
இன்-டிஸ்பிளே 3டி ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் In-display 3D Fingerprint Scanner) கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது.
இந்த செக்மெண்ட்டில் ஃபாஸ்டஸ்ட் சிப்செட் கொண்ட மாடலாக இந்த போன் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் வருகின்றன.

டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற வீடியோ பீச்சர்கள் வருகின்றன. அதேபோல நைட் மோட், போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6 ஜிபி + 6 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டிருக்கிறது.
அதேபோல 8 ஜிபி + 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிரது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது.
இந்த ரியல்மி பி1 5ஜி போனில் 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற பீச்சர்கள் வருகின்றன. பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) கலர்களில் கிடைக்கிறது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.750 கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த கேஷ்பேக் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15249 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications