இனி உங்க போன் டேமேஜ் ஆனா கவலைப்படாதீங்க.! Realme Care+ வந்தாச்சு.! ஈஸி ரீப்பிளேஸ்மென்ட்.!

|

அட்ராசக்கை.! எப்போ வரும்.. எப்போ வரும்.. என்று நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தவொரு முக்கியமான ஸ்பெஷல் அம்சம் இப்போது ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது.

உண்மையிலேயே realme வாடிக்கையாளர்களுக்கு இது படு குஷியான செய்தியாக அமையப் போகிறது.! இனி ரியல்மி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு சிக்கல் எழுந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை.!

Realme Care+ எதற்கானது? இது என்ன செய்யும்?

Realme Care+ எதற்கானது? இது என்ன செய்யும்?

காரணம், Realme இப்போது இந்தியாவில் முதன் முறையாக அதன் Care+ என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. Realme Care+ என்ற சேவை உண்மையில் எதற்கானது?

இது என்ன செய்யும்? எப்படி ரியல்மி வாடிக்கையாளர்களுக்கு நன்மையை வழங்கப் போகிறது என்று தெளிவாகப் பார்க்கலாம் வாங்க.

Realme Care+ என்பது ரியல்மி தயாரிப்புகளுக்கான விற்பனைக்குப் பிந்தைய சில ஆதரவை இந்த சேவை கொண்டுள்ளது.

ரியல்மி பயனர்களுக்கு எப்படி இந்த திட்டம் பாதுகாப்பளிக்கும்?

ரியல்மி பயனர்களுக்கு எப்படி இந்த திட்டம் பாதுகாப்பளிக்கும்?

ஆம், நீங்கள் ரியல்மி தயாரிப்பை வாங்கிய பின் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் சர்வீஸ் (Protection and Service) சேவைகளை இது உள்ளடக்கியுள்ளது.

Realme Care+ உடன், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டங்கள், தற்செயலான சேத காப்பீடு மற்றும் டிஸ்பிளே சேத பாதுகாப்பு திட்டம் போன்ற சேவைகளை வழங்குகிறது.

Realme Care+ தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, இப்போது டயல் ஃபிரீ எண்ணையும் (Dial Free Number) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

இந்த நம்பரை டயல் செய்யுங்க.! உடனே.!

இந்த நம்பரை டயல் செய்யுங்க.! உடனே.!

ரியல்மி நிறுவனம் ஒரு கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை (realme customer care service number) எண்ணை இந்தியாவில் இப்போது செயல்படுத்தியுள்ளது - இந்த சேவையை அழைப்பு மூலம் தொடர்புகொள்ள 1800 102 2777 என்ற எண்ணை டயல் செய்யுங்கள்.

ரியல்மி வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதத் திட்டம், அவர்கள் சாதனத்தை வாங்கியவுடன் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Realme Care+ சேவை கீழ் என்னென்ன திட்டங்களை வழங்குகிறது?

Realme Care+ சேவை கீழ் என்னென்ன திட்டங்களை வழங்குகிறது?

குறிப்பிட்ட IMEI எண்ணைக் கொண்ட ஒரு சாதனத்தில் மட்டுமே Realme Care+ சேவையை பயன்படுத்த முடியும். Realme Care+ சேவையின் மூலம் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Realme Care+ மூன்று சேவைகளை வழங்குகிறது, 1. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டங்கள், 2. தற்செயலான உத்தரவாதம் மற்றும் 3. டிஸ்பிளே சேத பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை வழங்குகிறது.

முதல் realme care+ திட்டம் எப்படி செயல்படும்?

முதல் realme care+ திட்டம் எப்படி செயல்படும்?

முதலாவதாக, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம் (Extended Warranty Plans) வரம்பற்ற பழுதுபார்ப்பு கோரிக்கைகள் மற்றும் சாதனத்தை ரீப்பிளேஸ் செய்யும் பயன்களை வழங்குகிறது. இந்த திட்டம் ரூ.589 முதல் ரூ.2,799 வரை மாறுபடுகிறது.

இந்த திட்டம் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆம், இந்த திட்டங்களுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சர்வீஸ் செய்யும் ஒட்டுமொத்த தொகையை விட இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

மற்ற 2 ரியல்மி கேர் பிளஸ் திட்டங்கள் என்னென்ன வழங்கும்?

மற்ற 2 ரியல்மி கேர் பிளஸ் திட்டங்கள் என்னென்ன வழங்கும்?

அடுத்தது, தற்செயலான உத்தரவாதமானது பாடி மற்றும் வாட்டர் சேதத்தை உள்ளடக்கியது. இந்த திட்டம் உங்களுக்கு ரூ.689 முதல் துவங்கி ரூ.4899 வரையிலான விலையில் ஓராண்டு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

கடைசியாக, ஸ்கிரீன் டேமேஜ் பாதுகாப்புத் திட்டம் ஒரு முறை டிஸ்பிளே ரீப்பிளேஸ்மென்டை உள்ளடக்கியது. இதன் விலை ரூ 489 முதல் ரூ 2549 வரை செல்கிறது. இதுவும் ஒரு வருடச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

Realme Care+ சேவையை பெற என்ன செய்ய வேண்டும்?

Realme Care+ சேவையை பெற என்ன செய்ய வேண்டும்?

விலையின் சரியான மேற்கோளைப் பெற, ரியல்மி வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனத்தின் சீரியல் நம்பர் அல்லது IMEI எண்ணை Realme Care+ இணையதளத்தில் சேர்க்க வேண்டும்.

ரியல்மி கேர்+ இணையதளம் சென்று, ஒரு வாடிக்கையாளர் தங்களுக்கான சேவையை முன்பதிவு செய்வதன் மூலம், மேற்கூறிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கலாம்.

Realme Care+ சேவையின் கீழ் சரி செய்யப்படும் சாதனம் அருகிலுள்ள சேவை மையத்திற்கு அனுப்பப்பட்டு.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

Realme Care+ திட்டங்களை வேண்டாம் என்றால் ரத்து செய்ய முடியுமா?

Realme Care+ திட்டங்களை வேண்டாம் என்றால் ரத்து செய்ய முடியுமா?

பழுதுபார்க்கப்பட்ட பிறகு உங்களிடம் திருப்பித் தரப்படும். ஒரு பயனர் அதன் Realme Care+ சந்தாவை ரத்து செய்ய முடியுமா இல்லையா என்பதையும் Realme விளக்கியுள்ளது.

Realme சாதனத்துடன் உத்தரவாதத் திட்டத்தை வாங்கியவர்கள் மட்டுமே அவர்கள் வாங்கிய திட்டங்களை ரத்து செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் விளக்கமாகத் தெரிவித்துள்ளது.

டிவைஸ் உடன் இல்லாமல், இதை நீங்கள் தனித்தனியாக வாங்கி இருந்தால், நீங்கள் அதைத் தனியாக ரத்து செய்ய முடியாது.

Best Mobiles in India

English summary
Realme Care+ Launched in India With Extended Accidental Warranty And Screen Damage Protection Plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X