இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

|

இந்தியாவில் 5G அறிமுகம் செய்யப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அனைத்து போன் நிறுவனங்களையும் சந்தித்து ஒரு சைலன்ட் கூட்டத்தை நடத்தியுள்ளது.

அதில் தங்களது ஸ்மார்ட் போன் தயாரிப்புகளை முழுமையாக 5ஜியாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இனி 5ஜி ஸ்மார்ட்போன் மட்டும் தான் தயாரிக்க வேண்டுமா?

இனி 5ஜி ஸ்மார்ட்போன் மட்டும் தான் தயாரிக்க வேண்டுமா?

மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களையும் 5ஜி ஸ்மார்ட்போனாக (5G Smartphone) மாற்ற மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே கெடு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, இனி இந்தியாவில் வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக 5ஜி இணக்கம் (5G Connectivity) இருக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவில் எத்தனை மில்லியன் மக்கள் 3G.. 4G.. 5G போன்களை பயன்படுத்துகிறார்கள்?

இந்தியாவில் எத்தனை மில்லியன் மக்கள் 3G.. 4G.. 5G போன்களை பயன்படுத்துகிறார்கள்?

ANI அறிக்கையின் படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 750 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.

இதில் சுமார் 350 மில்லியன் பயனர்கள் 3ஜி அல்லது 4ஜி போன்களை (3G/4G Phones) பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

அதேபோல், இந்தியாவில் இதுவரை தோராயமாக சுமார் 100 மில்லியன் பயனர்கள் மட்டுமே புதிய ஜெனெரேஷன் 5ஜி போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

ரூ. 10,000-திற்கு மேல் இனி 5ஜி போன் மட்டுமே கிடைக்குமா?

ரூ. 10,000-திற்கு மேல் இனி 5ஜி போன் மட்டுமே கிடைக்குமா?

இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மக்களை அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிற்கு (Next Generation Network) முன் நடத்தி செல்ல, இனி ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் உள்ள விலையில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் 3ஜி/4ஜியை தவிர்த்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இனி 5ஜி வசதியை மட்டுமெ வைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் புது போன்களை தயாரிக்க வேண்டும் என்ற இந்திய அரசு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு (Smartphone Manufacturers) ஆணையிட்டுள்ளது.

அப்போ.! 4ஜி நெட்வொர்க் பயனாளர்களின் நிலை என்ன?

அப்போ.! 4ஜி நெட்வொர்க் பயனாளர்களின் நிலை என்ன?

பெரும்பாலும், இனி தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை நாம் கட்டாயமாக எதிர்பார்க்கலாம்.

அதேபோல், 5ஜி போன்களில் 4ஜி சேவை எடுக்கும் என்பதனால், 4ஜி நெட்வொர்க்கில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் கவலைகொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய இரு நிறுவனங்களுமே சில இடங்களில் தங்களது 5ஜி சேவையைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

எப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி இந்தியா முழுக்க கிடைக்கும்?

எப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி இந்தியா முழுக்க கிடைக்கும்?

ஜியோ (Jio True 5G) நிறுவனம் 4 நகரங்களிலும், ஏர்டெல் (Airtel 5G Plus) நிறுவனம் 8 நகரங்களிலும் தங்களது 5ஜி சேவையை ரோல் அவுட் செய்து வருகின்றன.மற்ற நகரங்கள் விரைவில் 5ஜி சேவையை பெரும் என்றும் அவர்கள் உறுதி கூறி வருகின்றனர்.

ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை இந்தியா முழுவதும் 2023 இறுதிக்குள் கொடுத்துவிடுவதாகவும், அதேபோல் ஏரிடெல் நிறுவனமும் தனது 5ஜி சேவையை இந்தியா முழுவதும் மார்ச் 2024க்குள் கொடுத்துவிடுவதாகவும் உறுதி அளித்துள்ளன.

இந்தியாவிற்கு 5G வந்துடுச்சு.! ஓகே.! எங்க போனுக்கு எப்போப்பா வரும்? இதோ முழுத் தகவல்.!இந்தியாவிற்கு 5G வந்துடுச்சு.! ஓகே.! எங்க போனுக்கு எப்போப்பா வரும்? இதோ முழுத் தகவல்.!

எது.! 5ஜி பகுதியில் வசிக்கும் ஸ்மார்ட்போனில் 5G எடுக்கவில்லையா?

எது.! 5ஜி பகுதியில் வசிக்கும் ஸ்மார்ட்போனில் 5G எடுக்கவில்லையா?

இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள் சிலருக்கு இவ்விரு நிறுவனங்களின் அதிவேக 5ஜி சேவை வழங்கி வருகின்றன.

ஆனாலும், ஒரு சிலருக்கு எதிர்பார்த்த 5ஜி இன்டர்நெட் ஸ்பீடு (5G Internet Speed) கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலுக்கான முக்கிய காரணம், இந்த இரண்டு நிறுவனங்களின் 5ஜி சேவைகளும் ஒரு குறிப்பிட்ட மூன்று பேண்டுகளில் மட்டுமே இயங்குகிறது.

உங்கள் போனில்

உங்கள் போனில் "இது" இருந்தால் மட்டுமே 5ஜி இன் முழு வேகத்தை அனுபவிக்க முடியும்.!

n28, n78 மற்றும் n258 ஆகியவற்றில் இருப்பது தான் சிக்கலாக இருக்கிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மூன்று பேண்டுகளை (5G Bands) ஏற்கும் வசதி கொண்டிருந்தால் மட்டுமே முழுமையான 5ஜி வேகத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.

இந்த சிக்கலைச் சரி செய்ய, டெலிகாம் நிறுவனங்கள் OEM-களை விரைந்து செயல்பட்டு, உரிய சாப்ட்வேர் அப்டேட்டை (5G Software Update) வெளியிட வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

OEMகளுக்கு என்ன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது?

OEMகளுக்கு என்ன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது?

தொலைத்தொடர்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் டெலிகாம் ஆப்பரேட்டர்களின் ஃபோட்டா (FOTA) மென்பொருள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டது போல சில 5ஜி போன்கள் 5ஜி சேவை (5G Service) மூலம் இயங்க முடியாமல் இருப்பதால் OEMகளுக்கு அது தொடர்பான அப்டேட்களைக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

iPhone பயனர்களுக்கு எப்போது சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும்?

iPhone பயனர்களுக்கு எப்போது சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும்?

மேலும் ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) போன்ற முன்னணி பிராண்டுகள் தங்களது ஸ்மார்ட் போன்களில் தேவைப்படும் OTA அப்டேட்டுகளை சில வாரம் அல்லது மாதங்களில் கொண்டு வருமாறும் இந்தக் கூட்டத்தில் வாக்கு கொடுத்துள்ளனர்.

ஐபோன் 12 மாடலும் பிறகு வந்த எந்த போனிலும், ஏன் ஐபோன் 14 ஸீரிஸ் முதற்கொண்டு இந்த பேண்ட் 5ஜி சேவையில் இயங்கும் படி உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Government Orders Phone Manufactures To Provide 5G Phones and Stop Providing 3G and 4G Phones India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X