நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Realme போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி நிறுவனம் நாளை (ஏப்ரல் 15) புதிய ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த போன்களுடன் ரியல்மி பேட் 2 மற்றும் ரியல்மி வயர்லெஸ் இயர்ட்கள் கூட அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரியல்மி பி1 5ஜி போனின் விற்பனை குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் early bird sale எனும் சிறப்பு விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் இந்த போனை வாங்கும் பயனர்களுக்குச் சிறப்பு சலுகையும் வழங்கப்பட உள்ளது.

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 chipset) வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் விசி கூலிங் சிஸ்டம் (VC cooling system) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

ஐபி54 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். குறிப்பாக இந்தியாவில் ரியல்மி பி1 5ஜி போன் ஆனது ரூ.15,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ரியல்மி பி1 5ஜி போன் உடன் வெளிவரும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1, ட்ரிபிள் ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் ரூ.20000 விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








