Home
Mobile

ரூ.15000 விலை.. சுண்டிவிட்டா சிவக்கும் நிறம்.. மொத்தத்தில செம போன்.. எந்த மாடல்? என்ன விலை? எப்போது விற்பனை?

ரியல்மி (realme) நிறுவனம் இந்திய சந்தையில் ரூ.15,000 விலைக்குள் ஒரு புதிய மொபைல் (Mobile) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ரியல்மி பி1 5ஜி (realme P1 5G) என்ற பெயருடன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் இதோ.

ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் ரியல்மி பி1 5ஜி சீரிஸ் (realme P1 5G Series) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ் இன் கீழ் நிறுவனம் ரியல்மி பி1 5ஜி (realme P1 5G) மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (realme P1 Pro 5G) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.15000 விலை.. சுண்டிவிட்டா சிவக்கும் நிறம்.. மொத்தத்தில செம போன்..

ரியல்மி பி1 5ஜி (realme P1 5G):
இதில் ரியல்மி பி1 5ஜி (realme P1 5G) சாதனம் ரூ.15,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பட்ஜெட் விருப்பமாக வெளிவந்துள்ளது. அதேபோல், ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (realme P1 Pro 5G) சாதனம் ரூ.20,000 விலை பட்ஜெட் பிரிவின் கீழ் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவில் புது வரவாக சேர்ந்துள்ள புதிய சாதனம் தான் இந்த ரியல்மி பி1 5ஜி.

ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் இன்று சிறப்பு சலுகையுடன் ஏர்லி பர்டு சேல்ஸ் விற்பனைக்கு வெறும் ரூ.14,999 என்ற ஆரம்ப விலை முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கவுள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஏப்ரல் 15, 2024 மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே நடைபெறும். இந்த காலகட்டத்தில் புதிய ரியல்மி பி1 5ஜி போனை வாங்கும் நபர்களுக்கு ரூ.5000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இன்னும் கூடுதலாக சில வங்கி கார்டுக்கு கூடுதல் கேஷ் பேக் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நடைபெறும். அதேபோல், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாகவும் இந்த போன் இன்று வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, இந்த ரியல்மி பி1 5ஜி போனின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ரூ.15000 விலை.. சுண்டிவிட்டா சிவக்கும் நிறம்.. மொத்தத்தில செம போன்..

ரியல்மி பி1 5ஜி சிறப்பம்சம் (realme P1 5G Specifications):
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் 6.67" இன்ச் அளவு கொண்ட 120Hz AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) மற்றும் சன்லைட் ஸ்கிரீன் தொழில்நுட்பம் (Sunlight Screen technology) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 2000 நீட்ஸ் பிரைட்னஸை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இந்த பட்ஜெட் செக்மென்ட்டில் சக்தி வாய்ந்த சிப்செட்டாக கருதப்படும் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 5ஜி (MediaTek Dimensity 7050 5G) சிப்செட்டை பெறுகிறது. இது 6GB ரேம் மற்றும் 8GB ரேம் (RAM) விருப்பத்துடன் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் (Storage) விருப்பத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2TB வரையிலான மைக்ரோSD (microSD) மெமரியை ஆதரிக்கிறது.

இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 7 அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம் (7-layer VC Cooling System) ஆதரவையும் கொண்டுள்ளது. இது 50MP + 2MP சென்சார் கொண்ட டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் 16MP செல்பி கேமராவை வழங்குகிறது. இது 5000mAh பேட்டரியுடன் 45W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P1 5G 6GB RAM 128GB 8GB RAM 256GB Models Price Starts From Rs 14999 Via Flipkart India Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X