ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
இந்திய சந்தையில் அறிமுகமான 3 புதிய 5ஜி போன்களின் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளன. சுவாரசியமாக இம்மூன்று போன்களுமே ரூ.15,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன மாடல் எந்த தேதியில் விற்பனைக்கு வரும்? என்ன விலை? இதோ விவரங்கள்:
1. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரியல்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

அசல் விலையை பொறுத்தவரை, ரியல்மி பி1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விற்பனை சலுகையின் கீழ் ரியல்மி பி1 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,999 ஆக குறைக்கப்படும்.
இதனுடன் அறிமுகமான இன்னொரு ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) மாடலின் ரெட் லிமிடெட் சேல் (Red Limited Sale) ஆனது அதே தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலாக.. வெறும் 2 மணி நேரம் மட்டுமே நடைபெறும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விற்பனை சலுகையின் கீழ், மேற்கண்ட 2 வேரியண்ட்களின் விலையும் முறையே ரூ.19,999 ஆகவும், ரூ.20,999 ஆகவும் குறைக்கப்படும்.
2. மோட்டோ ஜி64 5ஜி (Moto G63 5G): மோட்டோரோலா றுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா (Motorola India ) வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

விலையை பொறுத்தவரை, மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1,000 தள்ளுபடியும் அல்லது எச்டிஎப்சி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,100 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): விவோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா (Vivo India) வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

விலையை பொறுத்தவரை, விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1500 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
இந்த 3 போன்களில் எதை வாங்கலாம்? மூன்றுமே 5ஜி ஆதரவுடன் வருகின்றன மற்றும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் சிப்செட்டையே பேக் செய்கின்றன. இருப்பினும் மோட்டோ ஜி64 ஆனது டைமன்சிட்டி 7025 ப்ராசஸர் (Dimensity 7025 Processor) உடன் அறிமுகமான உலகின் முதல் ஸ்மார்ட்போனாகும். இந்த காரணத்திற்காக மோட்டோ மாடலை வாங்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு கேமரா தான் முக்கியம் என்றால்.. இந்த மூன்று மாடல்களுமே 50எம்பி மெயின் ரியர் கேமராவுடன் வருகின்றன. ஆனால் மோட்டோ மாடலில் உள்ள மெயின் கேமராவானது ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் வருகிறது. பேட்டரியை பொறுத்தவரை, மோட்டோ மற்றும் விவோ மாடல் ஆகிய இரண்டுமே 6000எம்ஏஎச் உடன் வருகிறது. ரியல்மி மாடல் மட்டும் 5000எம்ஏஎச்-ஐ பேக் செய்கிறது. இனி எதை வாங்குவது என்கிற முடிவு உங்கள் கையில்!


Click it and Unblock the Notifications