Home
News

வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?

ரியல்மி (Realme) நிறுவனம் விரைவில் ரூ. 10,000 விலை பிரிவில் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. 10,000 ரூபாய் விலை பிரிவில் சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் வேகமான 5ஜி போனாக இது இருக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.

ரியல்மி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் மாடல் வரிசையில் உள்ள C சீரிஸ் வரிசையில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) என்ற பெயருடன் வெளிவரும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் ரூ. 10,000 விலைக்குள் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்..

ரியல்மி சி65 5ஜி (realme C65 5G):

இது ரூ. 10,000 விலையில் வாங்க கிடைக்கும் மிகவும் வேகமான பாஸ்ட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக இருக்கும் என்று ரியல்மி நிறுவனம் விளமப்ரம் செய்துள்ளது. ரியல்மி நிறுவனத்தின் அடுத்த மிகவும் மலிவு விலை பட்ஜெட் 5ஜி மொபைல் போனாக realme C65 5G இருக்கும் என்று கூறப்படுகிறது. ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையை புரட்டிப்போடும் போனாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6.67" இன்ச் அளவு கொண்ட IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ.10,000 விலை பிரிவில் 120Hz டிஸ்பிளே ஒரு சிறப்பான விஷயமாகும். இந்த டிஸ்பிளே 120/90/60/50Hz போன்ற ரெஃப்ரஷ் ரேட்களிலும் இயங்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிஸ்பிளே 625 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் உடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்..

ரியல்மி சி65 5ஜி சிறப்பம்சம் (realme C65 5G Specifications):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் (RAM) விருப்பத்துடன், 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இந்த சாதனம் 1TB வரையிலான மைக்ரோSD கார்டு ஸ்லாட் மெமரியை வழங்குகிறது.இது டூயல் நானோ சிம் உடன் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆதரவை கொண்டுள்ளது.

இந்த ரியல்மி சாதனம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 50MP ரியர் கேமரா, 2MP சென்சார் LED பிளாஷ் உடன் வருகிறது. 8MP செல்பி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. IP54 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை கொண்டுள்ளது. இது 5G NA/NSA, டூயல் 4G VoLTE, வைஃபை (Wi-Fi) 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் (Bluetooth) 5.1, GPS + GLONASS, யுஎஸ்பி டைப்-சி உடன் வருகிறது.

இது 5000mAh பேட்டரி உடன் 15W சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வழக்கம் போல பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அதிகாரப்பூர்வ அசல் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme C65 5G Launching Soon In India Under Rs 10000 As A Super Fastest Mobile Under Budget Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X