ஆர்டர் போட்ருங்க.. 11 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மாஸ்.. கம்மி விலையில் Redmi பேட் அறிமுகம்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் ரெட்மி பேட் எஸ்இ எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த டேப்லெட் கம்மி விலையில் குவாட் ஸ்பீக்கர்கள், 11-இன்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றம் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி பேட் எஸ்இ அம்சங்கள் (Redmi Pad SE specifications): 11-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+)டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் 1920×1200 பிக்சல்ஸ், லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) சர்டிஃபைடு, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடல். மேலும் மேலும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே கேமிங் பயனர்கள் இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடலை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரெட்மி டேப்லெட் மாடலை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
MIUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடல். டால்பி அட்மாஸ் ஆடியோ (Dolby Atmos audio) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்க்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி பேட் எஸ்இ மாடல் ஆனது 8எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. ஆனால் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி ரியர் கேமரா கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். மேலும் ஃபேஸ் அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட்.
8000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த டேப்லெட் ஆனது 478 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் எஸ்இ ஆனது ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக பிளிப்கார்ட், எம்ஐ.காம், அமேசான் தளங்களில் இந்த புதிய டேப்லெட் இன்று (ஏப்ரல் 24) முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications