Home
Mobile

ஏப்.16-18.. 3 நாட்களில் 3 வெவ்வேறு 5G Phone-கள் அறிமுகம்.. ஆனா எல்லாமே ரூ.15,000 பட்ஜெட்.. என்னென்ன மாடல்?

2024 ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில்.. முறையே ரியல்மி, மோட்டோ மற்றும் விவோ நிறுவனங்களானது தத்தம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளன. என்னென்ன மாடல்கள் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரியல்மி பி1 5ஜி சீரீஸ் (Realme P1 5G Series): இது ஏப்ரல் 15 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்கீழ் ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) என்கிற 2 மாடல்கள் வெளியாகும்.

3 நாட்களில் 3 வெவ்வேறு 5G Phone-கள் அறிமுகம் என்னென்ன மாடல்?

டூயல் ரியர் கேமரா செட்டப், கர்வ்டு AMOLED டிஸ்பிளே, அதில் மிகவும் மெலிதான பெஸல்கள், செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் ஸ்லாட், ரெயின்வாட்டர் டச் போன்ற அம்சங்களுடன் வரும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி மாடலானது ரூ.20,000 க்கு கீழ் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மறுகையில் உள்ள ரியல்மி பி1 5ஜி மாடலானது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்,120Hz AMOLED டிஸ்பிளே, TUV ரைன்லேண்ட் ஐ ப்ரொடெக்ஷன் சான்றிதழ், மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் மற்றும் 7 அடுக்கு விசி கூலிங் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் ரூ.15,000 க்கு கீழ் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

3 நாட்களில் 3 வெவ்வேறு 5G Phone-கள் அறிமுகம் என்னென்ன மாடல்?

மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G): இந்தியாவில் இது ஏப்ரல் 16ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 6.5 இன்ச் FHD+ 120Hz LCD டிஸ்பிளே, OIS உடனான 50MP மெயின் கேமரா, பிங்கர் பிரிண்ட் சென்சார் ,33W டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரி, டால்பி அட்மாஸ் உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.

விலையை பொறுத்தவரை இது ரூ.18,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகத்திற்கு பிறகு இது பிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம், இதற்கு முன் வெளியான மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.15,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கும் அறிமுகமானது.

3 நாட்களில் 3 வெவ்வேறு 5G Phone-கள் அறிமுகம் என்னென்ன மாடல்?

விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): இது ஏப்ரல் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.15000 க்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.

மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை.. ரியல்மி 12எக்ஸ் (Realme 12X) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவ்விரு மாடல்களுமே பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.

3 நாட்களில் 3 வெவ்வேறு 5G Phone-கள் அறிமுகம் என்னென்ன மாடல்?

ரியல்மி 12எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடக்கிறது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.11,999 ஆகும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,499 ஆகும், கடைசியாக உள்ள ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.14,999 ஆகும்.

மறுகையில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும் (ரீடெயில் பாக்ஸில் 68W சார்ஜர்), 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,999 க்கும் (ரீடெயில் பாக்ஸில் 125W சார்ஜர்) வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
3 New 5G Smartphones Launching in India on April 16 17 and 18 Realme P1 Moto G64 and Vivo T3x
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X