Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

50 எம்பி கேமரா, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 12ஜிபி ரேம், 90Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் லுக்கில் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பிய ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) போன் இப்போது மிரளவிடும் தள்ளுபடியில் கிடைக்கிறது.

ரூ.10000 பட்ஜெட்டுக்குள் பக்கா கேமரா, ஆக்டா கோர் சிப்செட், சூப்பர்வூக் சார்ஜிங், 2 டிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்கள் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். இந்த போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா போன்!

ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme Narzo N53 Specifications): இந்த ரியல்மியில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

அதேபோல 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் கேமிங் மற்றும் வீடியோ அவுட்புட் கிடைக்கும். ஏஐ (AI) சப்போர்ட் கொண்ட 50 எம்பி கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) உடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது.

இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), சிட்டி ஸ்ட்ரீட் ஃபில்டர் (City Street Filter), ஸ்க்ரெட் கார்டன் ஃபில்டர் (Secret Garden Filter), சன்னி ஹாலிடே ஃபில்டர் (Sunny Holiday Filter) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன. இந்த ரியல்மி நார்சோ என்53 போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா போன்!

ஆக்டா கோர் யுனிசோக் டி612 12 என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி 57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

இந்த 2 வேரியண்ட்களிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கம்மியான பட்ஜெட்டிலும் 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) வருகிறது. இந்த ரியல்மி நார்சோ என்53 போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஃபெதர் கோல்டு (Feather Gold) மற்றும் ஃபெதர் பிளாக் (Feather Black) ஆகிய 2 கலர்களில் விற்பனையாகிறது.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.10,999ஆக இருந்தது. அதன்பின் ரூ.9,880ஆக குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,130 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Realme Narzo N53 With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X